பக்கம்:கடல் முத்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஞான் ஒரு இந்தியணை' அவன்...? யாரோ ஒருவன். என்னவோ ஒரு பேர். ஏதோ ஒர் ஊர். ஊர் என்றவுடன் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’ என்ற பாட்டு ஒட்ட மாக ஓடி வர வேண்டாமோ? அவன்... கிடக்கிருன்! அதோ, எக்ஸ்பிரஸ். ஜாக்கிரதை. எக்ஸ்பிரஸ் ஒட்டமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது: -ஜாக்கிரதை! சென்னை-கொச்சி எக்ஸ்பிரஸ். நாட்டிலே இப்போதெல்லாம் ரோஷ உணர்ச்சியைப் பற்றி ரொம்பவும் தூக்கலாகவே பேசப்பட்டு வருகிறது. அதல்ைதானே என்னவோ, அந்தத் துரிதவண்டி கொச்சியைக் குறிவைத்துப் பூஞ்சிட்டாகப் பறக்கிறது: பறந்துகொண்டிருக்கிறது. சற்றே விலகி இருக்கிறேன்!" என்று சொல்லாமல் சொல்லி, தமிழ்மண் சற்றே ஒதுங்கி யிருக்க வேண்டும்! இங்கே, அவன் மனமும் ஒடத் தொடங்கிவிட்டது. அவனுக்கு இன்னமும் ஸ்தலம் கிட்டவில்லை. சென்னையில், சென்ட்ரல் ஸ்டேஷனில் தொடர்ந்த ஒற்றைக்கால் தவம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/107&oldid=764951" இலிருந்து மீள்விக்கப்பட்டது