பக்கம்:கடல் முத்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான் ஒரு இந்தியனண! 105 தாள். அவன்தான் அவளுடைய சேட்டன். சேட்டன் என்ருல் இங்கே கணவன்தான் - அண்ணன் இல்லை! லட்சணமான அழகிக்கு அவலட்சணமாக வாய்த்த முரட்டுக் கணவன். கண்கள் இரண்டும் ரத்தமாகச் சிவக்க எதிர்ப்பக்கம் பாய்ந்தான்! - ஆடு திருடிய கள்ளளுக’ விழித்துக்கொண்டே, அங்கிருந்து தப்பிப் பிழைக்க முனைந்த அந்த அநாகரிகப் போக்கிரியை அவனது கழுத்தில் கையைக் கொடுத்து இழுத்து நிறுத்தினன். .. "ராஸ்கல்!' - வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே, பாரதத்தின் பாரம்பரியப் பண்பாட்டின் நன்றியை மறந்த அந்தப் பாவியை அடித்து நொறுக்கக் கைகளை ஓங்கினன்! நாயர்!...” அவன் தடுத்தான்; மனிதத்தன்மையில் சிவிர்த்த மனிதாபிமானத்தோடு முரடனைத் தடுத்தான் அவன். சேட் டன் என்னைச் சமிச்சு மாப்புத் தரணும்!" என்று எச்சரித் தவளுக, அழகியின் முரட்டுக் கணவனிடமிருந்து அந்த அசிங்கமான மனித மிருகத்தை விடுவித்துத் தன் பக்கமாக இழுத்து, அந்த மிருக மனிதனின் நாகரீகமான, நயமான, சிவப்பான கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி - மாற்றி மாற்றி அறை கொடுத்தான் அவன்! - பட்டணமாக இருந் திருந்தால், இப்படிப்பட்ட அநியாயத்திற்குத் தண்டனை கொடுப்பதில் அவனுடைய பெண்டு பிள்ளைகளும் தோள் கொடுத்திருப்பார்கள்...! மறுகணம். .. அடிபட்ட ஈனப்புலி, இப்போது அவன்மீது பாய்ந்தது! அவன் சிரிக்கிருன்! - அவனைத் தற்காத்துக்கொள்ள அவனுக்குத் தெரியும்! அதர்மம்' மண்ணைக் கவ்விற்று! 'மாத்ருபூமி' படபடத்தது: நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டுமென்று பிரதமர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/114&oldid=764959" இலிருந்து மீள்விக்கப்பட்டது