பக்கம்:கடல் முத்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தட்டி மம்மே பாரே! 芷星莎 தேர்ந்த எழில்; ஆனல் அவள் பிறந்த மனே நொடிப்பின் விளைவாக இறக்கம் கண்டது. சம்பந்தம் சாடிக்கை' விஷயத்தில் வத்சலையின் தந்தை வலியப்போய் எதையும் செய்யமுடியாமல் இருந்தார். இந்த இக்கட்டான நிலையில் தான் வத்சலை தவியாய்த் தவித்தாள். தன் கழுத்தில் மஞ்சள் கயிறு விழுமா என்று ஏங்கிக் கிடந்தாள். குல தெய்வத்தை நொந்துகொண்டாள். தன் முறை அத்தானை ரகசியமாகச் சந்தித்து, தன் பரிதாப நிலையைக் கண்ணிர் மல்கிப் புரள விளக்கினள். சொக்கலிங்கம் இதயம் கொண் டிருந்தான். பணத்தை அவன் மதிக்கவில்லை: பெண்மையை மதித்தான். புதுச் சம்பந்தத்தை மதிக்காமல்; பழைய சொந்தத்தையே மதித்தான். விளைபலன்: வத்சலைக்கு, அவன் அம்மான் சொக்கலிங்கத்தின் நிழலில் போக்கிடம்' கிடைத்தது. சுயநினைவை மீட்டுக்கொண்டாள் அவள். இளநீலநிற ஒளிப்புனலைக் கடந்தன விழிகள். அவள், அவள் தேடிய கண் கள் நீரில் மிதந்துகொண்டிருக்கக் கண்டாள்! - "மஞ்சள் நீராடல் சடங்கு முடிந்தது. முகூர்த்தப் பட்டு சலசலக்க மாடிக்கு வந்தான் சொக்கலிங்கம். நடையில் இருந்த நிலைக்கண்ணுடி அவன் உருவை எழுதிக் காட்டிற்று. அழகு முகம் சஞ்சலத்தின் இழை பின்னிக் காட்சி தந்தது. சூன்ய வெளியில் கண் பதித்தான் அவன். இதயம் முழு வதிலும் வெறுமை அட்டகாசமாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பிலே அவனது அழுகை விளைந்தது. அக்கணம் தன் உயிர் தன்னிடமிருந்து விடைபெறத் துடிப்பதுபோலப் பட்டது அவனுக்கு. "ஆமாம்: அன்று தினம் அந்தத் தெய்வம் என் உயிரைக் காப்பாற்றவில்லையானல், இன்று நான் மாலையும் கழுத்துமாக விளங்கியிருக்க முடியுமா? முடியவே முடியாதே!... ' அவன் நெஞ்சு ஏறி இறங்கியது. அந்த ஏற்றத் தாழ்வில் அன்பு விளையாடியது. - "மாண்டலே பெட்டகம் வாய் திறந்தது. சிறிய புகை படமொன்று கண்திறந்தது. இமைக் கதவம் மூடாமல், அவ்வுருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/124&oldid=764970" இலிருந்து மீள்விக்கப்பட்டது