பக்கம்:கடல் முத்து.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Il 4 கடல் முத்து பந்தல் காவணத்தின் மையத்தில் சேகரித்து வைக்கப் பட்டிருந்த பரிசில்களையும், கடிதங்களேயும், வாழ்த்துப் பத்திரங்களையும் எடுபிடிகள் கைக்குக் கொஞ்சமாக அள்ளி எடுத்து, மணமகனுக்கு அருகில் வைத்தார்கள். மாப்பிள்ளை சொக்கலிங்கம் இளம் சிரிப்புத் தவழ, அவற்றைப் பார்க்க லானன். ஆர்வம் மிகுந்த பார்வை துள்ளிக் குதித்துத் தவழ்ந்தது; பட்டுச் சொக்காயின் இடது கைப்பகுதியைச் சுருட்டி மடக்கிவிட்டவாறு பரிசுப் பொருள்களை விரல் அமைத்து விலக்கிப் பார்த்தான். இதயத்தின் படபடப்பை நேத்திரங்களுக்கு மாற்றம் செய்து கொடுக்க ஒப்பாதவன் போன்று கடிதங்களின்மீது கண்ணுேட்டம் செலுத்தின்ை. ஒர் அரைக்கணம் அவனது இதயம் அதிர்ந்தது. மார்பில் இழைந்திருந்த மகரகண்டி மாலை அவனுடைய நெஞ்சையே அமுக்கி அழுத்திவிடுவதைப் போன்று உணர்ந்தான். சிதைந்த ஆசை கண்ணிரின் அவதாரம் மூண்டது. மணமகன் அழலாமா? கூடாது. தன்னைச் சமாளித்துக்கொண்டான் அவன். அப்போது, வாழ்த்துப் பத்திரங்களே மைக் கின் முன்னே வைத்துப் படித்துக்கொண்டிருந்தார் ஒர் இளைஞர்.

  • நங்கை வத்சலை! அபிமன்யு கிடைத்தாற்போன்று உனக்குச் சொக்கலிங்கம் கிடைத்திருக்கிருர், நீ கொடுத்து வைத்தவள். உங்கள் தாம்பத்தியம் சகல செளபாக்கியங் களுடன் பொலிவுபெற வாழ்த்துகிறேன்; பிரார்த்திக் கின்றேன்."

வாழ்த்துமடல் வரிகளில் மிதந்தாள் வத்சல. "ஆம், நான் கொடுத்து வைத்தவள்தான். சாமிக்கு நான் எடுத்துப் போட்ட பூ நல்ல பூவே தான்!-கண்கள் கசிந்தன. அந்தக் கசிவில்தான், நடந்த கதை திருப்பம் கண்டது. ‘. . . புதுப்பட்டியில் மு. ஆ. வீடு என்ருல் பசையான குடும்பம் என்று பேர். அந்த வீட்டின் தலைச்சன்தான் சொக்கலிங்கம். அவனுக்கு முறைப்பெண்தான் வத்சல. அழகை ஒரு கட்டிலும், அவளை மறுதட்டிலும் வைத்து நிறுத்தலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/123&oldid=764969" இலிருந்து மீள்விக்கப்பட்டது