பக்கம்:கடல் முத்து.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தட்டி மம்மே பாரே மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலேக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே களுப் போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனே நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வை யும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அ ரு வளி ய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினள். மனப்பந்தலில் மளமளப்பு மிஞ்சியது. வாங்க, வாங்க!" என்ற வரவேற்பு மொழிகளும், தம்பி அவங்க எல்லோரை யும் உட்காரவை. பர்மா பாயை விரிச்சுப்போடு, ம், ரங்கூன் ஜமுக்காளத்தையும் உதறி விரியப்பா!...இந்தா பார், மரவைத் தட்டிலே வெற்றிலே பாக்கை நிரப்பிக் கொண்டுவா!' என்ற உபசாரக் குறிப்புகளும் மாப்பிள்ளையின் இதழ்க் கரையினின்றும் ஒதுங்கி ஒலித்த வண்ணம் இருந்தன. சரி, நேரமாயிற்று. கல்யான பரிசு, வாழ்த்து எல்லாம் வந்து குவிந்து கிடக்கிறதே, எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்துவிடலாமே!...அப்புறம், பந்திவைக்க ஆரம்பித்து விட்டால், ஒரு சோவியைச் சமாளிக்கவே நேரமும் பொழுதும் காணுது!’ என்ருர் பெரியவர் ஒருவர். கழுத்தில் இருப்பிடம் அமைத்திருந்த ருத்திராட்சக் கெவுடு அவரது விரல்களின் ஆணைக்கேற்ப அசைந்தது. - , --> 'ம், அய்யா சொல்றதும் சரியான யோசனைதான்:சந்தனப் பேலாவை இடம் மாற்றிக்கொண்டிருந்த 'உக்கிராணப் பொறுப்பாளர் ஆமோதித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/122&oldid=764968" இலிருந்து மீள்விக்கப்பட்டது