பக்கம்:கடல் முத்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10
கடல் முத்து


றுநாள் இரவு மூன்று நாழிகைப் பொழுது. ‘ஏய்·’ ‘எசமான்.’ ‘சொல்றதைச் செம்மையாக் கேட்டுக்கணும். இன்னிக்குச் சாமத்துக்குக் கைவசமிருக்கும் சாராயப் புட்டிகள் அத்தனையையும் அப்படியே கொண்டுபோய் அந்த நடேசன் குடிசையிலே வச்சிரு. மற்றபடி இந்தத் துப்பு யாருக்கும் மூச்சுக் காட்டப்புடாது. உடனே ஒடிப்போய்ப் போலீஸ் காரங்கிட்டே விசயத்தை சொல்லிக் கையோடே அழைச்சிட்டு வந்திடு. கையும் மெய்யுமாப் பிடிபட்டப்புறம் பயல் எப்படித் தப்புரான்னு காணலாம். அவன் கையிலே விலங்கிட்டாத்தான் அவன் செஞ்ச பழிக்கு என் மனசு குளிரும்.’

முறுக்கேறியிருந்த மீசையை ஒருமுறை தடவிக்கொண்டான் தேவன்: அவன் கண்கள் சிவப்பேறின.

அச்சமயம் கம்பீரமாகத் தோன்றிய நடேசனைக் கண்ட மாசிமலைத்தேவன் திகைத்தான்.

‘தேவர் ஐயா, உங்களுக்கு ஏதுக்கு வீணாகக் கஷ்டம் கொடுக்கவேணாமின்னுதான் நானே வலிய உங்க கிட்டே வந்திருக்கேன். என்னை இப்போ என்ன செய்ய உத்தேசம்? என்று முழங்கினான் இளைஞன் நடேசன். அவன் குரலில் சோளம் பொரித்தது: இடியும் மின்னலும் மின்னின.

மலைத்துவிட்ட மாசிமலை தலைநிமிர்ந்தான். அவன் மனச்சவுக்கு அவனை வளைத்து முத்தமிட்டதோ?

‘ஐயாவே, நான் ஒங்களுக்கு என்ன தீவினை செஞ்சேன்? உசிரோடேயிருக்கிறப்பவே செத்துப் போனதாச் சொன்னீங்களாம். இப்போ என்னைக் கேசிலே மாட்டி வைக்க ரோசிக்கீறிங்க. வினை விதைச்சவன் வினையறுத்துத்தான் தீரனும்.′

நடேசன் பேசினான்.

‘ஐயா. என்னை அடையாளம் புரியுதா?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/19&oldid=1184754" இலிருந்து மீள்விக்கப்பட்டது