பக்கம்:கடல் முத்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

கடல் முத்து

 கண்ணிரில் நீந்திய விழிகளை மேலுயர்த்தினான். நடேசன் சரேலென்று வெளியேறினான். தேவனும் ‘நடேசா’ ‘நடேசா’ என்று அரற்றிய வண்ணம் பின்தொடர்ந்தான்.

அப்போது ‘யார் அங்கே?' என்ற அதிகாரத் தொனி எதிரொலித்தது. வாசலில் இரண்டு போலீஸ் ஜவான்கள் நின்றிருந்தனர்.

‘மிஸ்டர் 204 துரிதம் பண்ணி வீட்டைச் சோதனையிடுங்க. என்ற உத்தரவு சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து வந்தது.’

ஒரு கேசைப்பற்றித் துப்பறிய வந்த தாளுக்காரர்கள் வழியில் தேவனின் சதியை நீண்ட நேரமாக மறைவில் நின்று கேட்டிருக்கின்றார்கள். வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்தால் எப்படியிருக்கும்?

அவ்வீட்டினின்றும் ஆறு சாராயப் புட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தேவன் கைது செய்யப்பட்டான். அவன்வினை அவனைச் சுட்டுவிட்டது!

முன் நிலா.

மாசிமலைத்தேவன் படுத்த படுக்கையாகிப் போனான். அவன் மனச்சாட்சி அவனை அணு அணுவாகப் பிய்த்துத்தின்றது. எலும்பும் தோலுமாகிவிட்டான். அவன் சொத்து முழுவதையும் நடேசனுக்கு எழுதிவைத்தான்.

'அக்கா, மகனையும் மருமகளையும் பார்க்கத்தானே ஜாமீனிலேகூட ஒடியாந்தேன். திருநாளைக்குப் போன அதுகரெண்டும் இன்னம் திரும்பல்லியே. என்ன விசயம்?′

விளக்கு வைக்கும் நேரத்தில் கிழவிக்குக் கடிதம் ஒன்று வந்தது. நடேசனும் பவளக்கொடியும் அக்கரைச் சீமைக்குப் போய்விட்டார்கள். அந்த ‘ஜோடி’ தேவனின் கண்களில் மீண்டும் விழிக்க விரும்பவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/21&oldid=1184907" இலிருந்து மீள்விக்கப்பட்டது