பக்கம்:கடல் முத்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழப் பிறந்தவள் 25。 அதே தருணத்தில் பாலத்தில் போய்க்கொண்டிருந்த உரு மும் மறைந்தது. - என்ன அந்தச் சப்தம்?" 'நீங்களும் கவனிச்சிங்களா எசமான்?" அடுத்தகனம் சேகரன் தண்ணிரில் குதித்தார். நல்ல வேளேயாகத் தண்ணிர் கழுத்தளவே இருந்தது. நீரில் மூழ்கி எழுந்த அவர் கையில் மனித உடல் ஒன்று தட்டுப் பட்டதை உணர, பலத்தை ஒன்றுசேர்த்து அவ்வுருவத்தைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார். வழியில் கிடத்தப்பட்டிருந்த உடலை அருகிலிருந்த விளக்குக் கம்பத்தின் மிங்கிய ஒளியில் உற்றுக் கவனித் தான் கண்ணுச்சாமி. உள்ளம் அதிர, ஐயோ, கடைசியிலே அது என் காஞ்சனேதான?’ என்று அலறிஞன். காஞ்சனை!" முத்துப் பதிந்த மென்முறுவல்: அ. தி லே மயங்கச் செய்யும் காந்த இழைவு. வேல் விழிகள்; அதிலே மனங் கவர் மானின் மருட்சி. தளிர் மேனி; அதிலே பருவ வளர்ச்சி யின் பூரித்த அங்கங்கள். ஆமாம்; அனைத்தும் காஞ்சனே! இருந்தும்...! வாழ்க்கைப் பூங்காவில் புதுமணம் பரப்ப வேண்டிய புதுமலர் பேயும் அஞ்சும் மையிருட்டில் ஆற்றைச் சரணடை யக் காரணம்? இளமையின் தொடக்கத்திலேயே வாழ்வு வெறுக்கும்படி என்னதான் சம்பவித்தது? வீட்டிற்குக் கொண்டுவந்து படுக்கவைத்தான் கண்ணுச் சாமி. அவள் விரக்திக்குக் காரணம் பிடிபடாமல் மனம் குழம்பிக் கிடந்த சேகன் ஸ்டெத்தாஸ்கோப்" கொண்டு சோதனை செய்து பார்த்தார். உயிருக்குப் பயமில்லை என்பதை உணர்ந்ததும் அவருக்கு மிக ஆறுதல் உண்டாண்து. நிமிஷங்கள் சில தேய்ந்தன. - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/34&oldid=765005" இலிருந்து மீள்விக்கப்பட்டது