பக்கம்:கடல் முத்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கடல் முத்து இணைந்திருந்த இமை வட்டங்களிடையே விழி விரிப்பு. மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தாள் காஞ்சனே. டாக்டர் முகத்தில் வியப்பு: கண்ணுச்சாமிக்கு அப் போதுதான் போன உயிர் மீண்டது போன்ற அமைதி. காஞ்சனேயின் புருவங்கள் மேலேறி நின்றன. சேகரன் திரும்பினர், அவள் பக்கமாக. பார்வைகள் பரிமாறின.

  • காஞ்சனை, இருந்திருந்தாற்போல ஆற்றில் விழ நேரிட் டதின் மர்மம்தான் என்ன? டாக்டர் அன்புடன் வினவிஞர். அவள் பதில் கூருமல் கண்ணிர் பெருக்க ஆரம்பித்தாள்; உடல் நடுங்க மார்பகம் ஒர் முறை விம்மித் தாழ்ந்தது. காஞ்சனே, ஏன் இப்படித் தேம்புகிருய்? உன் மெளன மும் மனக் கலக்கமும் உன் தந்தைக்கு எவ்வித சஞ்சலத்தை உண்டாக்கும் என்பதை யோசித்தாயா? சொல். என்ன வானுலும் வாயைத் திறந்து பதில் கூறு."

இவ்விதம் சொல்லிய டாக்டர் திரும்பவும் அவளே நோக்கினர். விழிவெள்ளம் அடங்கவில்லை. தன் தந்தை ன்யயும் சேகரனேயும் மாறி மாறிப் பார்த்த அவள் பார்வை யில் அடியுண்ட மானின் வேதனை தடம் பரப்பியது. "டாக்டர் ஸார், தயவு செய்து என்னேத் தடுக்காதீர்கள். நான் சாகப் பிறந்ததவள். உலகம் சிரிக்க, மனசுக்கு என் இத்ய அந்தரங்கத்தை வண்த்து முத்தமிட்டுச் செல்லும் நரக வேதனையைச் சகிக்க எப்படி என் மனம் தாழும்? காஞ்சனே, விபரமாகச் சொல்.’ . நான் கர்ப்பவதி." - என்ன?” - இரண்டு குரல்கள் ஒரே :த்தில் எதிரொலித் தன. சில வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். பணத்தின் மமதையில் இடப்பட்ட விஷவித்து. மிட்டாதார் மகள் என் வகுப்புத் தோழி. ஒருநாள் அவளிடம் புத்தகமொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/35&oldid=765006" இலிருந்து மீள்விக்கப்பட்டது