பக்கம்:கடல் முத்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழப் பிறந்தவள் 37 வாங்கப் போனேன். அவள் இல்லை; அவள் தமையன் மட்டுமே இருந்தான். நான் புறப்படுவதைக் கண்ட அவன், தன் தங்கை வரும் நேரமாகிவிட்டதாகத் தங்கச் செய்தான். தான் தங்கினேன், தோழியைக் காண. ஆனல் மறுநிமிஷம் அந்தப் பாவி என்ன பலவந்தப்படுத்தி. . ஐயோ...இந்த இழிவுநிலையிலா மீண்டும் இவ்வுலகைத் திரும்பக் காண என்னைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். ஊஹூம் சாத்திய மில்லை...திரும்பவும் தந்தையின் முன்னிலையில்...உங்கள் முன்னிலையில்...அந்தோ: வார்த்தைகள் குழம்பின. இளகிய நெஞ்சம் படைத்தவனல்லவா தமிழன்? சேகரன் கண்கலங்கினர். கண்ணுச்சாமி செயலிழந் தான். டாக்டர் சிந்தித்தார். சிந்தனையின் தொடுவாயில் எண் ணங்கள் அலைபாய்ந்தன. 'காஞ்சனை கபடமற்றவள். பச்சைப் பசுங்குழந்தை போன்றது அவள் மனப் பண்பாடு. தகதகக்கும் செந்தணல் பிழம்புகளில் அவளைத் தள்ளி அவளுடைய மலரவேண்டிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிடத்தான் திட்டமிட்டிருப்பான் அந்த வஞ்சகன். அதன் நிமித்தம் அவள் வெந்து சாம்ப லாக வேண்டியதுதானு? எத்துணை கோரமான நியதி: நினைக்கவும் மயிர் சிலிர்க்கும் ஆணையல்லவா? உலகில் பிறக்கத் தவங்கிடந்து, பின் இப்படிச் சாவை அரவணைக்க அதற்கு வரவேற்பும் அளிக்கவேண்டுமா? கூடவே கூடாது. பெண் பாவம் பொல்லாதது. துன் டி. ற் புழுவாகத் துடிக்கும் அவளுக்கு அபயமளிப்பதே புண்ணியம்-கடமை. ஆம்; அவள் காப்பாற்றப்படவேணும். இனி காஞ்சனே என் உயிர்த்துணைவி...ஆகா!' - தன்னிடம் வேலைசெய்யும் காவற்காரனின் மகளைக் கரம்பற்ற முடிவு செய்தார் டாக்டர். வாழ்க்கைப் புத்தகத் தின் ஆரம்ப அத்தியாயம் அவளாலேயே துவக்கப்பட வேண்டும். அவருக்கு அனைத்தும் கனவு மாதிரி தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/36&oldid=765007" இலிருந்து மீள்விக்கப்பட்டது