பக்கம்:கடல் முத்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி 33 முடிவு சொல்லிப்பிடு. முத்து, அ ப் பற மா ப் பேச்சை மாத்தப்படாது. சாதுரியமாகப் பேசிய மாரி யி ன் வார்த்தைகளில் முத்தையனுக்கு நம்பிக்கை பிறந்தது. அவன் சொல்லும் முடிவும் நியாயமானதாகவே பட்டது. உடனே சம்மதம் தெரிவித்தான். என்னிக்குப் பந்தயம் வச்சுக்கிடலாம்?' என்று கேட் டான் முத்தையன். அடுத்த கிளமை இன்னேரமா என்று பதில் கொடுத் தான் மாரி. மாரியை அனுப்பிவிட்டுத் திரும் பி ைன். வழியில் குணவதி குதுரகலத்துடன் வந்துகொண்டிருந்தாள், இடுப்பில் கூடையுடன். குணவதி, கூடையெல்லாம் பெலமா இருக்கே புதுசா -வேடிக்கையாக வினவின்ை முத்தையன். ஆமா மச்சான், ஒங்க அதிர்ஷ்டம் பெலமா இருக்கணு மேன்னு அரசமரத்துப் பிள்ளையாருக்கு நெதம் பூச்சாத்த ரேன்னு வேண்டிக்கிட்டிருக்கேன். "நீ சொல்றது ஏதும் புரியலையே." "மச்சான், ஒங்களுக்குத் தெரியாதா? அந்த நாளிலே சனக மவராசா தம் வில்லை ஒடிக்கறவுங்களுக்குத்தான் தம் மவ சீதையைக் கொடுக்கிறதாச் சொன்னருன்னு கதை கேட்டிருக்கேன். இப்ப என்னுடான்ன பரிசல் பந்தயம்-' இப்பல்ல புரியுது. குணவதி கொஞ்ச முந்தித்தான் மாரிப் பய வந்து சேதி பூராவையும் சொன்னன். நானும் சரின்னு சொல்லிட்டேன்’ என்ருன் முத்தையன் சன்னக் குரலில். "மச்சான் கண்ணுலம் கட்டிக்கிறதிலே எனக்கும் பாத் தியம் இருக்கு. ஒங்களை நெனச்ச மனசு இனிக் களுவிலே கூட அந்தப் பய மவன் மாரியை நெனைக்காது. அப்படி 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/42&oldid=765014" இலிருந்து மீள்விக்கப்பட்டது