பக்கம்:கடல் முத்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கடல் முத்து யிருக்க என்னத்துக்குப் பந்தயமும் மண்ணுங்கட்டியும். மாரிப் பய என்னமோ சூது பண்ணி- - உஸ், சத்தம் போடாதே குணவதி. அவங்க ஒரு வளிக்குத் தோதா வர்றபோது நாமும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தான் வேனுமாக்கும். நீ ஒன்னுக்கும் கவலேப் படாதே. இப்பச் சொல்றேன்னு பாரு. கடைசிவரை நீ மட்டும் என் குணவதிதான்- என்ருன் முத்தையன். குணவதிக்கு முத்தையன் கூறின வார்த்தைகள் தெம்பை ஊட்டின. அவள் கன்னங்களில் நாணம் தடம் பதிந்தது. சூரியனின் இளங்கதிர்கள் அவள் வதனத்தைப் பின்னும் சோபிக்கச் செய்தன. அக்காட்சியில் தன்னை மறந்தான் முத்தையன், அந்தி வானில் விந்தைக் கோளங்கள் மலர்ந்திருந்தன. அன்றுதான் முத்தை யனும் மாரியும் ஒப்பந்தம் செய்து கொண்ட பந்தயநாள், காவேரிக் கரையில் கூட்டம் கூட்ட மாகக் கூடியிருந்தனர். குணவதி படிக்கட்டின் ஒரு ஒாத்தில் அமர்ந்திருந்தாள். நாலேந்து நாட்களுக்கு முன்னிருந்த தைரியம் அவளுக்குத் தற்சமயம் இல்லை. எப்படியும் வெற்றி தன் மச்சான் முத்தையாவுக்குத்தான் என்பது நிச்சயமான லும், ஒருக்கால் கெட்ட காலமாக மாசி பக்கம் அதிர்ஷ்டம் திரும்பிவிட்டால் தன் கதி என்னுகும் என்பதை நினைத்துப் பார்த்த அவளுக்கு அதிர் ச் சி உண்டாயிற்று. காதல் பரீட்சை அப்புறம் விஷப் பரீட்சையாகிவிடுமோ என்று மனம் நொந்தான். இத்தகைய இக்கட்டான நிலையில் கடவுள் பேரில் பாரத்தைப் போட்டுக் காணிக்கை வேண்டிக்கொண் டோன் குணவுதி. கண் மூடிக் கண் திறக்கும்போதில் கூட்டத்தில் அமைதி நிலவியது. முத்தையனைக் கண்டவுடன் ஓடிவந்து தைரிய, மூட்டினுள் குணவதி. புத் துயிர் பெற்ற முத்தையன் சுதாரிபபுடன் படகில் தாவிஞன். அதே சமயம் மாரியும் ஜாடையாகக் குணவதியை நிமிர்ந்து நோக்கினன். ஆளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/43&oldid=765015" இலிருந்து மீள்விக்கப்பட்டது