பக்கம்:கடல் முத்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி 35 அவள் இவனைச் சட்டை செய்யாமல் முகத்தை அப்பால் திருப்பிவிட்டாள். எதிர்பாராத ஏமாற்றத்தால் வேதனை யடைந்த மாரி படகில் அமர்ந்தான். இரண்டுபேரும் மறு கணம் துடுப்பைத் தள்ள ஆரம்பித்தனர். ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் படகுகள் நீரைக் கிழித்தோடின. அக் கரை மூலையில் எல்லையிடப்பட்டிருந்தது கொடி ஒன்று. அந்த வட்டாரத்தில் படகு ஒட்டுவதில் முத்தையன் ரொம்பவும் அனுபவம் பெற்றவன். ஆதலால் எவ்விதத் திலும் மாரியைத் தோற்கடித்துவிடலாமென்ற நி ைப்பு. வர வர அவனுக்கு ஷோக்கு பிறந்தது. ஆனல் மாரியின் படகும் சளைக்கவில்லை. - கொஞ்ச நாழிகை சென்றது. எல்லேயைத் தொட்டுத் திரும்பிய படகுகள் இரண்டில் ஒன்று மட்டுமே கண் பார்வை யில் தெரிந்தது. ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். குனவதி கண்களைத் தீட்டிக்கொண்டு ஆதுரம் ததும்ப உற்று நோக்கி ள்ை. அவளுக்கு அக்காட்சி உயிரையே மாய்த்துவிடும் போலாகிவிட்டது. யாரு மாரிப் பயலா?? என்று அலறிஞள் குணவதி. - திரும்பும் படகு கட்டாயம் முத்தையனுடையதாகவ்ே இருக்கும் என்று எண்ணிய அவள், மாரியின் படகு வந்து நின்றதைக் கரையில் ஓடிவந்து பார்த்தாள். அப்படின்ை என் மச்சான்’ என்று மனதில் கேட்டுக்கொண்டாள்! மாரி தோளில் முத்தையனே அணைத்து வருவதைக் கண்டாள். 'மச்சான்’ என்று அலறி விழுந்தாள். முத்தையனுக்குச் சுவாசம் மிகவும் லேசாக வந்துகொண்டிருந்தது. எல்லாம் ஏதோ சூழ்ச்சி என்பது அப்போதுதான் குனவதிக்குப் புலயிைற்று. ' குணவதி, ரெண்டுபேரும் முக்க த் ைத த் தாண்டி திரும்பையிலே, முத்து படகு ஒட்டையாப் போச்சு. தண்ணி படகிலே ரொம்பினதைக்கூடக் கவனிக்காமத் திரும்பவும் படகைத் தள்ளி முந்த ஆரம்பிச்சுச்சு. திடீர்னு அப்பறம் பரிசல் தண்ணியிலே கவிழ்ந்து போச்சு. தண்ணியில்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/44&oldid=765016" இலிருந்து மீள்விக்கப்பட்டது