பக்கம்:கடல் முத்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கடல் முத்து ஆமா! ஏதுக்கும் மேலே கடவுள் இருக்காரே... ஊம்... பந்தயமின்னு சாக்குப் பண்ணிட்டு அந்தப் புள்ளே முத்தைய னைக் கொன்னுபடச் செஞ்சிருக்கிற சூழ்ச்சி வெளங்கிச்சு...' 'அத்தை, நம்ப குல தெய்வத்து மேலே ஆணையாச் சொல்றேன். இப்பச் சொல்றதெல்லாம் சாடா நெசம். என்னமோ குனவதி மேலே இருந்த பிரியத்திலே... அதை எப்படியும் கட்டிக்கிடணும்னு மனசிலே கொண்ட ஆசை யாலே-என்னமோ பாவம் செஞ்சுப்புட இருந்தேன். ஆன தெய்வம் சமயத்திலே எனக்குக் கனவுலே சோதனை காட்டி டுச்சு. என் கண்ணும் திறந்து பூட்டுது. ஆளு அப்பாருக்கு இந்தச் சேதி தெரியவே தெரியாது. மேலும் குணவதி முத்தையனைக் கட்டிக்காமப் போன கட்டாயம் ஆத்திலே விழுந்து மாண்டுபோயிடறதா ஊரிலே சொல்லியிருக்குதாம். அதுக்கு முத்தையன் மேலே இவ்வளவு உசிரு இருக்குமின்னு, நெனைக்கலை. அப்படி உள்ளதை வலுக்கட்டாயப்படுத்திக் கட்டிக்க நான் நினைச்சது எம்புட்டு முட்டாள்தனமிங்கறது இப்பத்தான் புரியுது அத்தை. ஏன் இப்படி வெயிலிலே ஓடி வந்தேன் தெரியுமா? குணவதிக்கும் முத்தையனுக்கும் நாங்களே இருந்து கண்ணுலம் கட்டி வைக்கிருேம். அப்பத் தான் என் மனசு அடங்கும். குணவதி எங்கே...? என்று கேட்டான் மாரி ஆர்வத்துடன். - இன்னும் அவன் பேச் சி ல் நம்பிக்கை விழவில்லை கிழவிக்கு. எப்படி ஏற்படும் நம்பிக்கை? . . . மாரி வாய் கடுக்கப் பேசாதே. ஓங்க பண்த்துக்கும் காசுக்கும் நாங்க ஏழைங்க, பயப்படத்தானே வேண்டியிருக் குது. இனி எனக்குக் கவலையில்லை. எப்படியும் குணவதியும் முத்தையனும் பொளேச்சுப்பூடுங்க. அதுக ரெண்டுபேரும் இதுக்குள்ளே கண்டிச் சீமைக்குக் கப்பல் ஏறியிருப்பாங்க...' கண் கலங்க, ஆளுல் குரலில் கண்டிப்புத் தொனிக்கக் கிழவி சொன்னதைக் கேட்டான் மாரி. அவனுக்கு உலகமே சுழின்றது. தன் நினைவு வந்ததும் விம்மிய உள்ளத்துடன் முகத்திலே தோல்வியின் சின்னம்தோன்ற வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான் மினரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/47&oldid=765019" இலிருந்து மீள்விக்கப்பட்டது