பக்கம்:கடல் முத்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை

 1952ஆம் ஆண்டு என்று நினைவு. அப்போது ‘வேலைவில்லவன்’ என்னும் புனைபெயரில் என் சிறுகதைகளை இலக்கிய நோக்கோடு வெளிவந்துகொண்டிருந்த இதழ்கள் சிலவற்றில் எழுதி வந்தேன். அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஓர் இதழ் பொன்னி. அவ்விதழுக்கு நான் அனுப்பிவைத்த கதை ஒவ்வொன்றும் கிடைத்ததும் அது வெளியீட்டிற்கு ஏற்கப் பெற்றுள்ளதாகவும், விரைவில் வெளிவரும் என்றும் எழுதி என்னை ஊக்குவித்தவர் அக்காலப் பொன்னி துணை ஆசிரியர் திரு. எஸ். ஆறுமுகம் அவர்கள்.

அவர் அவ்விதழிலும் பிற இதழ்களிலும் எழுதியிருந்த சில சிறுகதைகளின் தொகுப்பு கடல் முத்து என்ற பெயரில் வந்தபோது அதை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்த நான் அதை அடுத்து வந்த காலக்கட்டத்தில் திரு. பூவை எஸ். ஆறுமுகம் அவர்களின் படைப்புக்களை அவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றிய உமா இதழில் படித்து மகிழும் வாய்ப்பினைப் பெற்றேன். அவ்இதழில் அவர் இளம் எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளித்ததோடு நாடறிந்த எழுத்துலகப் பெருமக்களோடு தாம் நிகழ்த்திய பொருள் பொதிந்த உரையாடல்களைப் பேட்டிக் கட்டுரைகளாக வெளியிட்டு வந்தார். பு க ழ் பெ ற் ற எழுத்தாளர்கள் பலருடைய இதய வேட்கை, விழைவுகளையும் பண்பட்ட கருத்துக்களையும் விளங்கிக்கொள்ள அக்கட்டுரைத் தொடர் ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பயன்தர வல்லவையாக அமைந்தன.

திரு. ஆறுமுகம் அவர்களின் எழுத்தையும், கையெழுத்தையும் மட்டுமே அறிந்தவனாக இருந்த நான்

iii
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/5&oldid=1180657" இலிருந்து மீள்விக்கப்பட்டது