பக்கம்:கடல் முத்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை உள்ளம் 49. மேஸ்திரிக்குத் தன் செவிகளை நம்பவே முடியவில்லை. " சிங்காரம், என் சின்ன புத்தியாலே உன்னைச் சந்தே கிச்சுத் தப்பா நெனச்சேன். என்னை மன்னிச்சுப்பிடு. நான் சொல்றதைத் தட்டாமல், அந்தச் சரட்டை உன் மகள் கழுத்திலே போட்டுப்பிட்டு ஒடிவா! என் மகள் உயிரைக் காப்பாத்தித் தந்தா அதுவே நீ எனக்குக் கோடி ரூபாய் கொடுத்த மாதிரி. சிங்காரம் பின்தொடர, மேஸ்திரி ஒட்டமும் நடையு. மாகச் சென்ருர், சென்று பார்த்தார், அவர் வீட்டில் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கச் செய்தது. சர்வ சாதாரண மாகக் குதூகலத்துடன் நின்றுகொண்டிருந்தாள் அவர் பெண் கமலா. அப்படியென்ருல் விஷம் தானகவே அகன்று விட்டதா என்ன? அப்பா, முதலிலேயே சொல்லிடுறேன். நீங்க என்னையோ, நம்ப வேலைக்காரனயோ கோவிச்சுக்கப்படாது. செல்லம்மாவுக்கு மேலுக்கு முடியலைன்னு கேட்டதும் பார்க்க ஒடியாந்தேன். அப்பத்தான் நீங்க அது அப்பாவைக் கண்ட படி கோவிச்சுக்கிட்டு, சரட்டைத் தரத்தான் வேணுமின்னு கண்டிச்சிங்க. அப்போ இருந்த அவரு மனசு உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னைப் பாம்பு கடிச்சதாகப் பொய் சொல்லியனுப்பினேன். கடைசியா என் தந்திரமும் பலிச்சுது. எனக்கு மந்திரிக்கச் செல்லம்மாவின் அப்பாரு வேண்டி யிருந்ததாலேதானே உங்க மனசு திடுமின்னு மாறிச்சு? இல்லையான அந்த ஆளைச் சும்மாவா விடுவிங்க? அப்பா, செல்லம்மாவும் நானும் உயிருக்குயிர். அவங்க ஏழைங்க; கடனப்பத்தி இனித் தொந்தரவு பண்ணுதிங்க!' என்ருள் d# L#### , தன் ஆசை மகளைப் பாம்பு தீண்டவில்லை என்றறிந்ததும் மேஸ்திரிக்குப் போன உயிர் திரும்பிற்று. சிறு குழந்தை யானுலும் விதரனை புரிந்த பெரியவர்களைப் போன்று பேசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/58&oldid=765031" இலிருந்து மீள்விக்கப்பட்டது