பக்கம்:கடல் முத்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொற்காலத்தின் பொற்கனவாக நாளும் பொழுதும் மின்னிக் கொண்டிருக்கின்ற ‘பொன்னி’ அன்று பழக்கப்படுத்திய எழுத்தாளர் ‘வேலை-வில்லவன்’ இன்று ‘கவிஞர் தயா’வாகக் காட்சி தருகின்றார்!—அருள்திரு. டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் அவர்களின் பேரன்பிற்கு நான் என்றென்றும் நன்றியுடன் செஞ்சோற்றுக் கடன்பட்டவன்.

அன்றும் சரி, இன்றும் சரி!-தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும் அறிஞர்கள் ‘பூவை’யை மறந்தது இல்லை; அதுவும் என் பாக்கியம்தான்!

1966ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் என்னுடைய ‘பூவையின் கதைகள்’ நூலுக்குத் தமிழக அரசின் முதற் பரிசினை வழங்கினார். பின்னர், 1982ஆம் ஆண்டில் முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழக அரசின் சார்பில் எனக்கு இரண்டு முதற்பரிசுகளைத் தந்தார். ஒன்று: முழுநீள நாட்டுப்புற நாடகநூல். மற்றொன்று: ‘தெய்வம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?’ எனும் கதைக் கொத்து!

ஓர் ஆச்சரியம்!—என்னுடைய நாற்பத்தைந்து ஆண்டுக்கால இலக்கியப் பணியிலே வெளிப்படுத்தப்பட்ட என் சிறுகதைத் தொகுப்புக்கள் தாம் இவ்வகைப் பட்டியலிலே எண்ணிக்கையில் மிகுந்திருக்கும்! ஒரு நல்ல செய்தி!—என் அருமை மகன் பூவைமணி கடல் முத்துக் கதைகளில் சிலவற்றை மேடையேற்றப் போகிறானாம்!...

கவிச்சக்கரவர்த்திக்குச் சடையப்ப வள்ளல் கிடைத்தது உண்மை. .

அப்படியேதான், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பேரன்பிற்கு நானும் பாத்திரமாகி இருக்கிறேன்.

சத்தியத் தர்மத்தையும், தர்மச் சத்தியத்தையும் மதிக்கின்ற உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் பூவையை மறக்கமாட்டார்கள்! மறக்கவும் முடியாது!—எல்லாருக்கும் நன்றி.

அன்புடன்

பூவை.எஸ்.ஆறுமுகம்

தமிழ் அரசி

சென்னை–600 018

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/8&oldid=1180509" இலிருந்து மீள்விக்கப்பட்டது