பக்கம்:கடல் முத்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரும்பிப் பார்க்கிறேன்

ன் முதற்கனவு ‘கரகம்’. சரித்திரப் பேராசிரியர் சாண்டில்யன் அவர்கள் அந்நாளிலே, அதாவது, பொங்கு விரிகாவிரியின் புனித மணம் தவழும் திருச்சிராப்பள்ளியில் புனித சூசையப்பர் கல்லூரியிலே நான் பி. ஏ. இறுதி யாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது, என் முதல் கதையை ‘சுதேசமித்திரன்’ ஞாயிறு மலரில் வெளியிட்டார். அடிமைப்பட்டிருந்த அருமைப் பாரத மணித் திருநாடு விடுதலை பெற்றுச் சுதந்தரம் பெற்றுப் பழம்பெருமையைத் தற்காத்துக்கொண்ட பொன்னான தருணம் அது!—ஆனால், நானே என் எழுத்துக்கு அடிமைப்பட நேர்ந்தது!

காலம் ஒரு புள்ளிமான்! நாட்கள் வந்தன: போயின.

ஒர்உண்மைஉங்களுக்குத்தெரிந்திருக்கவேண்டும்!— ‘பொன்னி’தான் எனக்குத் தாய்வீடு. ஆனால், நான் தாய் வீட்டிற்கு அழைக்கப்படுவதற்கு முன்னமேயே, என்னுடைய ஐந்தாவது சிறுகதையைப் பொன்னி பொங்கல் மலர் வெளிப்படுத்தி அன்புகண்டது; அன்புகாட்டியது. அந்த மலர்க் கதைதான், காவிரித் தஞ்சையின் வட்டார மணம் கொழித்த கடல் முத்து ஆகும். அது இப்பொழுது தமிழ்ப்படைப்பு இலக்கியத்தின் இயல்பான-எதார்த்தமான பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், வண்ணம் சேர் நூல் வடிவம் பெறுகிறது! நான் மகிழ்வேன், நீங்களும் மகிழ்வீர்கள்.

‘அங்கிங்கெனாதபடி, எங்கும் பிரகாசமாய் ஆனந்தப்பூர்த்தியாகி’ விளங்குகின்ற ஆண்டவன் ஒரு விளையாட்டுக்

у
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/7&oldid=1180191" இலிருந்து மீள்விக்கப்பட்டது