பக்கம்:கடல் முத்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கடல் முத்து ஜீவன் துடிக்க, அழகான இளம் மீசையும் துடித்தது. ஆலமரத்தில் எம்பித் தாவியவன், கைத் துணிக் கிழிசலை விசிவிட்டு உச்சாணிக் கொம்பில் ஏறினன்: அந்தப் பெண்ணின் தங்கமான கழுத்தை ஈவிரக்கமில்லாமலே முறுக் கேற்றி இறுக்கி விட்டிருந்த முடிச்சுக்களை முன் பற்களால் கடித்துத் தளர்த்தின்ை மூச்சு இரைத்தது. மறுநொடியில் அந்தப் பெண் அழகி மண்ணிலே சாய்ந்தாள்! அவ்வளவுதான்! மறு நொடியில் அவன் ஐயையோ!' என்று வீரிட்டான்! ஈரல் குலை துவண்டு நடுங்கத் தொடங் கியது; கன்னத் தழும்புகளில் எரிச்சல் மூண்டது; மீண்டது. இப்பொழுது அந்த இரண்டு பாதித் துவாலைக் கிழிசல்களும் திசை மாறிய விதியாகிக் கமுக்கமாகவே சிரித்துக்கொண்டிருந் தனவோ? . அவன் தரை மீன் ஆன்ை. மூச்சுப் பேச்சில்லாமலும், மூடின. கண்கள் திறக்காமலும், பிணம் போலவே இன்னமும் மல்லாந்து கிடக்கிருள் அந்தப் பெண். . . ! இருட்டைப் பார்க்காமல் ஆளுல் அழகுச் சுவை வாசனையை மட்டிலும் பார்த்த ஈக்கள் மாம்பழக் கன்னங் களில் காட்டுத்தனமாக மொய்க்கின்றன. பருவம் திமிறிய கவர்ச்சியான இளைய மார்பகம் அந்தமும் சந்தமும் வழிய எம்டி எம்பித் தாழ்கின்றன. சோற்றுக்கைப் பக்கத்துக் கொட்டடி ரவிக்கைக் கிழிசலில் மின்னிப் பளிச்சிட்ட கரும் புள்ளிக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டுவிட்டுச் சர்ட்சி சொல்லத் தெரியாமல் சுங்கடிச் சேலை சரிந்து கிடந்தது. ரத்தக் கோடுகளும் அங்கங்கே துல்லிதமாகத் தரிசனம் கொடுத்தன. இடைவெளி விட்டு ஒற்றைவட்த் தங்கச் சங்கிவியும் பார்வைக்குப் பொருளாகத் தவறிவிடவில்லை தான்! . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/95&oldid=765072" இலிருந்து மீள்விக்கப்பட்டது