பக்கம்:கடல் முத்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 87 கூதல். - குனிந்து கிடந்த தலை பையப் பைய நிமிர்ந்தது, பவளக்கொடி...!" "ஆசையான எம்பூட்டு அயித்தை மவளே! அழகுக் குட்டியே! பவளக்கொடிக் கண்ணே! என்னுேட கண்ணு திறந்திருச்சே! நீ மட்டுக்கும் கண்ணை மூடிக்கிட்டு இப்படிப் பொணம் கணக்கிலே கிடக்கலாமா புள்ளே பவளக் கொடியோ?” சாண் பிள்ளையானலும் ஆண் பிள்ளை அல்லவா? ரோசம் ரோசமாக வந்தது. கோபமும் கூடவே வந்தது. இனி, தொட்டு எழுப்பினுல்தான் உண்டு. பிச்சை ஏந்துகிற மாதிரி கைகளைப் பரப்பி நீட்டினன். குழந்தையாக ஏந்தினன். நீர் தெளித்தான் முகத்தில். அருமை பெருமையான எம்பூட்டு அயித்தை மகளே, பவளக்கொடிப் பெண்ணே. . . விலை மதிக்க வாய்க்காத அபூர்வமான உன்னுேட உசிரை நீயே வைராக்கியமாய்ப் போக்கிடத் துணிஞ்சதுக்கு அப்பாலே, நான் மட்டும் உசிர் தறிச்சிருப்பேனங்காட்டி? இந்தாலே, இப்பவே நானும் கொஞ்சம் முந்தி திட்டமிட்டாப்பிலேயே சுருக்குப் போட்டுக் கிட்டு செத்து மடிஞ்சிப் பூடுறேன்... ! தாயே ராக்காச்சி! எப்படி எப்படியெல்லாம் நீ விளையாடிப் பூட்டே விளை யாட்டுக் காட்டிப்பூட்டே...? ஐ ைய ேயா, பவளக் கொடியோ...! நான் கொடும் பாவி...! ஆத்தாளுக்கே அடுக்காத என்னேட பெரும் பாவத்துக்கு எனக்கு நானே கொடுக்கப் போற தண்டனைதான் சத்தியமான, தருமமான பரிகாரமாக அமையவும் ஏலுமாக்கும்! ஆமா!' கதறிக்கொண்டே எழுந்தான். எழுந்தவன், ரத்தம் நிறக்க எட்டத்திலே கிடந்த பாதிக் கிழிசல் துவாலைகளில் ஒன்றை இனம் கண்டு எடுக்க ஒட்டி நடந்தான். நடந்தவன், கால் தடுக்கிப் பவளக்கொடியின் காலடியிலே சரணடைந் தான். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/96&oldid=765073" இலிருந்து மீள்விக்கப்பட்டது