பக்கம்:கடல் முத்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கடல் முத்து மறு இமைப்பிலே அடி பாவியே! ராக்காச்சி... ! பாவியாக்கப்பட்டுப் புட்ட என்னை இன்னமுமா உசிரோட வச்சிருக்கே? ஐயையோ...! இனிமே நான் என்ன செய்வேனம்?" கெட்ட சொப்பனம் கண்டவளாக அலறிப் புடைத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அந்தப் பெண். உச்சந். தலையிலும், அடிவயிற்றிலும் பலம் கொண்டமட்டும் அடித்துக் கொண்டே மருக்கொண்டவள் போலே விழி பிதுங்கச் சுற்றிச் சூழப் பார்வையை வீசிள்ை. திடீரென்று ஆண் வாடையை உணர்ந்ததுதான் தாமதம், உடனே அவள் தன்னைத்தானே ஆத்திரம் மூளப் பார்த்துக்கொண்டாள். உடலும், உள்ளமும் பதறிய நிலையில், அலங்கோலமாகக் கிடந்த மாரகச் சேலையைச் சீராக்கிக் கொண்டபின், யாருங்க நீங்க?' என்று மூர்த்தண்யமான ஓங்காரக் குர லெடுத்து வினவினுள் அவள். பத்ரகாளியை நேருக்கு நேர் கண்டவன் மாதிரி ஓர் அரை நொடி நடுநடுங்கிவிட்டான் சக்திவேல். பிறகு, சுயப் பிரக்கினையை நிதானமாக மீட்டுக்கொண்டான். அயித்தை மகளே, பவளக்கொடித் தங்கமே! என்னைத் தெரியலையா? நான்தான் உன்னேட அம்மான் மகன், முறை மச்சான் சக்தி வேல் 1’ என்று இனம்காட்டி ஈனத் தொனியில் பேசினன் அவன். ஆ! நீங்களா?” பவளக்கொடி விம்மினள். ஆமா புள்ளே!" சக்திவேல் செருமினன். அப்படீன்ன, செத்துச் சிவலோகம் பறியப்போன இந்தப் பாவியை நீங்களா காப்பாத்தீனிக?" ஆமா புள்ளே, ஆமா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/97&oldid=765074" இலிருந்து மீள்விக்கப்பட்டது