பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

4. காட்டிலே வேட்டை


வறுமையிலே வாடிய தன் குடும்பத்தை விஷக் காய்ச்சல் மேலும் கொடுமைப்படுத்தியதைக் கண்டும், கொஞ்சமும் கருணை காட்டாமல் கடுமையாகப் பேசித் தன்னை அவமானப்படுத்திய தருமலிங்கத்தை நினைத்துப் பார்க்கும் பொழுதே, நடேசனுக்கு அவர்மேல் கோபங் கோபமாக வந்தது.

அந்தக் கோபத்தின் விளைவாக, என்ன செய்கிறோம் என்று யோசித்துப் பார்க்காமலேயே அவசரமான காரியம் ஒன்றில் ஈடுபட்டு விட்டார் நடேசன்.

வைரக் கற்களுக்குப் பதிலாக போலிவைரங்களான இமிடேஷன் கற்களை வாங்கி, பொட்டலங் கட்டிக் கொண்டு வந்தார். உண்மையான பொட்டலத்தை மடியிலே வைத்துக்கொண்டு, தான் கொண்டுவந்த போலி வைரப் பொட்டலத்தைத்