பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் கைவிட மாட்டார்
35
 

தந்துவிட்டு, நைசாக வீட்டை விட்டு வெளியே வந்தார் நடேசன்.

“இன்று இரவே, பக்கத்துப் பட்டணமாக விளங்கும் பேருருக்குச் சென்று, வைரக்கற்களை விற்றுவிடவேண்டும். விற்ற பணத்துடன் இரவோடு இரவாகத்தன் குடும்பத்தை வெகுதூரம் உள்ள ஒரு ஊருக்குக் கூட்டிச் சென்று, அங்கே நிம்மதியாக வாழவேண்டும்.”

இதுதான் நடேசனின் திட்டம்.

‘தருமலிங்கத்திற்கு இதுதான் சரியான தண்டனை’ என்று நடேசனின் மனம் மகிழ்ச்சியால் துள்ளி விளையாடியது. ‘தருமலிங்கத்தை நன்கு பழிவாங்கி விட்டேன்’ என்ற பேரானந்தத்துடன் வீட்டுக்கு வந்து சேர்ந்த நடேசன், ‘இதோ சீக்கிரம் வந்து விடுகிறேன்’ என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு, வேகமாக நடக்கத் தொடங்கினார்.

இந்த நம்பிக்கைத் துரோகத்தைக் காண மனம் சகிக்காமல், சூரியனும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தான். ‘என்ன ஆகுமோ, ஏதாகுமோ’ என்று பயப்படுவதுபோல, மேகங்கள் வானத்தில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன.

அந்த வட்டாரத்திலேயே தலைநகரம் போல விளங்கியது பேரூர். சர்க்கரைத் தொழிற்சாலை