பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடை வைத்துப் பிழைப்போம் என்று ஒருவன் கூற, மற்றொருவன் ‘ஆமாம்’ என்று ஆமோதித்தான்.

வெளியிலே அவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டாலும், மனதிலே அத்தனை வைரக்கற்களும் தனக்கே கிடைக்காமற் போயிற்றே என்ற கவலையுடன், எச்சிலை விழுங்கிய வண்ணம் ஏக்கத்துடனேயே நடந்தனர்.

‘தக்க சமயம் கிடைத்தால், அடுத்தவனை ஏமாற்றி வைரக் கற்களைத் தட்டிக் கொண்டுபோய் விட வேண்டும்’ என்று சந்தர்ப்பத்தை இருவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

புலி மீண்டும் அந்தப்பக்கம் வந்தாலும் வரும். ஆகவே, ஆற்றங்கரை வழியாகப் போவதுதான் நல்லது என்று, தாங்கள் வந்த வழியே சென்று ஆற்றங்கரைமீதே நடந்து போய்க் கொண்டிருந்தனர்.

பேருரும் வந்து விட்டது என்பதை ஒரு டீக்கடையிலிருந்து வந்த ரேடியோ சத்தம் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. ‘வா ராஜா வா, என்ற பாட்டு அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.’

பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னர், ஆற்றங்கரை படித்துறையில் இறங்கி, கைகால் முகம் கழுவி, சுத்தமாக வரவேண்டும் என்று இருவருமே