பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடவுள் கைவிட மாட்டார் 87 எங்கே பார்த்தாய் வேம் புலி? ஏ ன் அழைத்துக் கொண்டு வரவில்லை? என்றார் தருமலிங்கம்! எசமான்! இன்னிக்கி பெரிய ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன். என் தம்பிக்கு காய்ச்சல். அவனுக்கு மருந்து வாங்கனும்னு போனேன். அப்பொ தாங்க பார்த்தேன். பார்த்தா பாவமா இருந்ததுங்க! பாவமா துரோகம் பண்ணுனவன் முகம் கொடுரமா இல்லே இருக்கும். பாவமாவா இருக்கும்? அவர் குரலில் கோபமும் கிண்டலும் கலந்து உறவாடிச் சென்றன. போ போய் அழைத்துப் பார்! இல்லையென்றால் கட்டி இழுத்துவா என்று ஆணையிட்டார் தருமலிங்கம். முடியாதுங்க அவரை புலி அடிச்சு போட்டுட்டு போயிடுச் சுங்க! ஐயோ! புலி அடிச்சா எப்படி இருக்குங்க! என்று வேம்புலி பயந்தவன் போல் நடித்து காட்டினான். அவர் எழுந்திருக்க முடியாதுங்க கால் இரண்டையும் கட்டி தூக்கிலே மாட்டுனெ மாதிரி உயரமா தொங்கப் போட்டிருக்காகங்க! என்ன? ஆஸ் பத்திரியில் படுக்கையிலே கிடக்கிறாரு அப்ப வா போய் பார்க்கலாம் என்று