பக்கம்:கடவுள் பாட்டு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50


அந்தி சந்தி தொறுமுனையே
அடியேன் உள்ளக் கோயிலிலே
வந்திக் கின்றேன் என்னுளத்தே
வந்த மர்வாய் பெருமானே!
150
எங்கோ உள்ள செங்கதிரோன்
இனிய ஒளியை உலகுயிர்கள்
பங்கில் சேர்த்து வாழ்வளிக்கும்
பான்மை கண்டேன் எம்பெருமான்.
எங்கோ புலனுக் கெட்டாமல்
இருக்கும் நீயுன் அடியாரின்
பங்கில் அருளைச் சேர்த்திடுவாய்
பணிந்து தொழுதேன் பரம்பொருளே.
151
கானு முன்னே காண்பதற்கே
கருத்தில் ஆவல் கொண்டிருந்தேன்
காணக் கிடைத்த பொன்னடியைக்
கண்ணில் ஒற்றிக் கொளநினைத்தேன்
பேணும் இறையே அதன்பின்னே
பிரியா தொட்டிக் கொள நினைத்தேன்
வேணும் என்று நினைத்ததெலாம்
விரும்பித் தந்தாய் அருளோனே!
152
இருளே நீங்கி ஒளிவெள்ளம்
இதயத் துள்ளே பெருக்கெடுக்க
அருளே உன்றன் திருக்காட்சி
அடையும் பேறு பெற்றேன்நான்
பொருளே வேறு கருதாமல்
பொற்றாள் ஒன்றே நினைவாகத்
தொழுதேன் பாடித் தொழுகின்றேன்
தொழுவேன் இனிஎக் காலமுமே!
153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/52&oldid=1211755" இலிருந்து மீள்விக்கப்பட்டது