பக்கம்:கடவுள் பாட்டு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


இரண்டு கையும் குவித்துன்னை
ஏற்றித் தொழுது வெள்ளமெனத்
திரண்டு வருமுன் அருட்புனலில்
திளைத்து மூழ்கிக் கிடக்காமல்
முரண்டு செய்யும் மனிதருடன்
முட்டி மோதிக் கொண்டிவனே
புரண்டு கிடக்கும் எனக்குன்றன்
பொற்றாள் காட்டி யருள்வாயே.
175
கண்டேன் கண்டேன் திருவடியைக்
கையால் பற்றிக் கொண்டேனே
உண்டேன் உண்டேன் திருவருளாய்
ஒழுகும் அமுதத் தேனினையே!
பண்டே யுற்ற துன்பமெலாம்
பறந்து மறைந்து போயினவே
கொண்டேன் கொண்டேன் என்றென்றும்
குறையா இன்பங் கொண்டேனே.
176
பள்ளங் கண்டு நீர்பாயும்
பஞ்சு கண்டு தீப்பாயும்
உள்ள காற்றும் இல்லாத
ஒரி டத்தே தான்பாயும்
கள்ள மற்ற என்னுளத்தே
கருணை மிக்க தேவாநீ
வெள்ளம் போலே பாய்ந்தோடி
வீற்றி ருக்கக் கண்டேனே.
177
வண்ணம் பலவாம் எழில்காட்டும்
வடிவம் பலவாம் யாவையுமே
கண்ணைத் திறந்து பார்த்தால்தான்
காட்சி தருமென் பெருமானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/59&oldid=1211777" இலிருந்து மீள்விக்கப்பட்டது