பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
116
 


“சொன்றி, கிமிரம், மடை கூழ், புழுக்கல்,
ஒன்றிய மூரல் சோறு எனஉரைப்பர்”.

(சேந்தன் திவாகரம்-பல்பொருள் பெயர்த் தொகுதி 78)

என்பது அவரது நூற்பாப் பகுதி. திருவள்ளுவரோ இன்னும் ஒரு படி மேலே போய். உணவு தொட்ர்பானஉணவுப்பொருள்கள் எல்லாவற்றிற்குமே பொதுப்பெயர் ராகவும் கூழ் என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்:

“படைகுடி கூழ் அமைச்சு கட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”. (381)

(திருக்குறள் - பொருட்பால் இறைமாட்சி)

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு”. (554) .

(திருக்குறள்-பொருட்பால்-கொடுங்கோன்மை) என்பன அவர் பாடல்கள்.

திருவள்ளுவரை அடியொற்றி,

‘படையும் குடியும் கூழும் அமைச்சும்
அரணும் நட்பும் அரசியல் ஆறே”. (12-90)

எனத் திவாகரரும் தம் நிகண்டு நூலில் கூறியுள்ளார். எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்யாகிய (எள் +நெய்= எண்ணெய்) எண்ணெய் என்னும் பெயர், மற்ற எல்லா வகை நெய்களுக்கும் பொதுப் பெயராய் இன்றும் வழங்கப்படுவது போல, கூழ் என்னும் பெயரும், எல்லா வகை உணவுப் பொருள்கட்கும் பொதுப் பெயராயிற்று.

தமிழிலே யன்றித் தெலுங்கு இலக்கியத்திலும் ‘உணவு என்னும் பொருளில் கூழ்” என்னும் சொல் ஏறி விட்டது. கல், முள், மண் என்னும் சொற்களோடு ‘உ’ சாரியை சேர்த்துக் கல்லு, முள்ளு, மண்ணு, என்று சொல்வது போல, கூழ் என்பதோடும் ‘உ’ சாரியை சேர்த்துக் ‘கூழு' என்று தமிழில் வழங்குவது