பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/155

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
153
 


அவர். உடனே யான், சிவன் கூடப் பிறந்தவர்தானா? என்று வியப்புடனும் வேதனையுடனும் வினவினேன். ஆமாம்.-ஆமாம் என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் அறைந்தார் அம்முதியவர். திங்கள் கிழமைகளில் சோம வார விரதம் என்ற பெயரில் சிவனுக்காக நோன்பு இருப்பது உனக்குத் தெரியாதா? என்றும் கேட்டு விட்டார் அப்பெரியவர். உடனே எனக்கு நாடி ஒடுங்கிவிட்டது. சிவன் கூடப் பிறந்தவர்தான் போலும்: என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது எனது வாய்.

இதனால், சிவனும் பிறந்தவரே என்பது தெளிவாயிற்று. சிவன் தோற்றமும் ஒடுக்கமும் இல்லாத முழுமுதற் கடவுள் எனச் சைவ சமய ஆத்திகர்கள் கூறுவர், ஆனால். மடுகரை முதியவர், பழுத்த ஆத்திகராயிருந்து கொண்டே ‘சிவனும் பிறந்தவர்’ என்று கூறியதில் உண்மை இருக்கத்தான் வேண்டும். எனவே, சுடவுளர்களாகக் கருதி வழிபடப்படுவோர் அனைவரும் மாந்தர்களே என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். சிவன், திருமால் பிரமன் போன்றோர். காலம் கணக்கிட்டுக்கூற முடியாத மிகப் பழங்காலத்திலே பிறந்து வாழ்ந்தவராக இருக்கக் கூடும்.

சைன சமயத்தவர் வழிபடும் சிவனும் பெளத்த சமயத்தினர் வழிபடும் புத்தரும் போன்றோர் காலம் கணக்கிட்டுக் கூறக்கூடிய பிற்காலத்தவர் என்பது அறிந்த செய்தி. கடவுளரின் பட்டியலைக் கூறவந்த மண்டல புருடர் தமது சூடாமணி நிகண்டு நூலின் பதினோராவது-ஒரு சொல் பல்பொருள் பெயர்த் தொகுதி ககர எதுகை என்னும் பகுதியில்

பகவனே ஈ சன் மாயோன்
பங்கயன் சினனே புத்தன்

எனக் கூறியுள்ளார். பகவன் கடவுள். ஈசன் - சிவன்.