பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17
 


டுள்ளது. இவற்றுள் ஒவ்வோர் இனத்திலும், ஆயிரக் கணக்கான-நூறாயிரக்கணக்கான - கோடிக்கணக்கான உயிரிகள் உள்ளன. இத்தனை வகை உயிரிகள் உலகுக்குத் தேவையா? இவ்வளவையும் ஏன் படைக்க வேண்டும்? வீட்டில் குழந்தைகள் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மிகுதியாகப் பிறந்தால்-நாட்டில் மக்கள் தொகை பெருகினால் கட்டுபடியாகவில்லை - சமாளிக்க முடியவில்லை என்பதால் மக்கள் இனத்தார் குடும்பக்கட்டுப்பாட்டைத் (Birth Control) கடைப்பிடிக்கின்றனரே! கடவுள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப் பிடிக்கலாகாதா? இவ்வளவு உயிரிகளை இம் மண்ணுலகில் படைத்து. உண்டி, உறையுள் முதலியன போதாமல் இன்னலுறச் செய்ய வேண்டுமா?

ஒன்றை ஒன்று

இங்கே பல்வேறு உயிர்களைப் படைப்பதால் என்ன நன்மை? ஆனால் ஒரு நன்மை கூறலாம்! உயிர்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கின்றன; தம்மினும் சிறிய உயிரிகளைப் பெரிய உயிரிகள் கொன்று தின்கின்றன. இது சிறிய உயிரிகள் முதல் பெரிய உயிரிகள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும். பகுத்தறிவு உடையவர்கள் என்று தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்ற மக்களே, தமக்குள் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுகின்றனரே! ஒன்று மற்றொன்றைக் கொன்று தின்பதற்காகத்தான், இத்தனை வகை உயிரிகளைக் கடவுள் படைத்தாரா? இறக்கப் போகும் உயிரிகளைப் பிறப்பிப்பதேன்?

கவுளுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகள்-கடவுள் முன் எல்லா உயிர்களும் சமமானவை - என்பதாக ஒரு கருத்து கதைக்கப்படுகிறது. அங்ஙனமெனில், தம் பிள்ளைகளுக்குள்ளேயே ஒரு பிள்ளை மற்றொரு பிள்ளை