பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75
 


இத்தகைய பல்வேறு மருத்துவ முறைகளால் மாந்தன் இயங்குகிறான்-வாழ்கிறான். இயந்திரங்களில் எல்லா உறுப்புக்களையும் மாற்றமுடிவதுபோல் மக்கள் உடலில் எல்லா உறுப்புக்களையும் மாற்ற முடியவில் லையே எனக் கேட்கலாம; மற்றும், பெரும்பாலான இயந்திரங்களை உறுப்பு மாற்று முறையில் இயங்கச் செய்வதுபோல, மிகுதியான மக்களை உறுப்பு மாற்று முறையால் பிழைக்கச் செய்ய முடியவில்லையே-- எங்கேயோ ஓரிருவரைத்தானே இ ம் மு ைற யா ல் பிழைக்கச் செய்ய முடிகிறது என்றும் கேட்கலாம். இதற்கு இதோ பதில் : இயந்திரங்கள் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டவை; அவற்றின் உறுப்பு ஒவ்வொன் றும் மனிதனால் பொருத்தப்பட்டது; எனவே, மனிதன் எளிதிலும் பெரிய அளவிலும் இயந்திரங்களைப் பழுது பார்த்து இயக்க முடிகிறது. ஆனால், மாந்தன் தன்னால் படைக்கப்பட்டவன் அல்லன்-இயற்கையால் படைக்கப் பட்டவன்; எனவே, இயற்கையின் மறைவுகள் (இரக சியங்கள்) அனைத்தையும் கண்டு பிடித்து, உறுப்பு மாற்று முறையால் பரந்த அளவில் மிகுதியாக மக்கள் உடலை இயங்கச் செய்வதற்கு இன்னும் போதுமான காலம் வேண்டும்.


மற்றும்,- மாந்தன் தன்னால் கண்டு பிடித்துச் செய்யப்பட்ட இயந்திரங்களைக் கூட, குறிப்பிட்ட காலம் வரையுமே உறுப்பு மாற்று முறையால் ஒட வைத்துக் கொண்டிருக்க முடியும். காலம் கடந்துபோன -மிகவும் பழமைப்பட்டுவிட்ட (obsolete) இயந்திரங்களை அவனால் ஒன்றும் திருத்த முடியாது; நிலை கடந்து விட்டது.(out of condition)எனக் கூறி அவற்றைத் தூக்கி எறிந்து விடுவான். அதேபோல, காலம் கடந்துபோன-மிகவும் சீர்கேட்டுப்போன மக்கள்