பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81
 


எல்லாச் செயல்களிலும் துாண்டல்-துலங்கல் இருப்ப தைக் காணலாம். - உள்செல் நரம்புகள் (Afferent Nerves) e.gyūLjääss லிருந்து மூளைக்குச் செய்தி எடுத்துச் செல்வதாகவும், வெளிச்செல் நரம்புகள் (Efferent Nerves) மூளையி லிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதாகவும் அறிந்தோம். எனவே, நரம்பு கயிறு போல் இருந்து மூளையையும் மற்ற பகுதிகளையும் இணைக்கிறது என்பது தெளிவு. இதனைச் சுமார். ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் என்னும் தமிழ்த் துறவி திருவாசகம் என்னும் நூலில்,

“மொய்ப்பால் நரம்பு கயிறாக
     மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன்”

என்று அறிவித்திருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. குப்பாயம் என்றால் சட்டை (Shirt) என்று பொருளாகும். சட்டையின் பாகங்கள் நூல் கயிற்றால் இணைத்துத் தைக்கப்படுவதுபோல, உடம்பு என்னும் சட்டையில் உள்ள மூளை-எலும்பு-உறுப்புக்கள், நரம்பு என்னும் கயிற்றால் தைக்கப்பட்டிருப்பதாக-தொடர்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிறதன்றோ! மாணிக்க வாசகர் தமது திருவாசகம்-போற்றித் திருவகவல் என்னும் பகுதியில் கூறியுள்ளபடி, கல்வி என்னும் பல் கடல் கடந்து பாண்டிய மன்னனுக்குத் தலைமை அமைச்சராய் இருந்தவர் அல்லவா?


திருவாசகம்-ஆசைப்பத்து-2