பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
89
 


யும், தூக்கம் வராமல் ஏற்படும் தொல்லை காரணமான சூழ்நிலையும், இன்ன பிறவும், தூண்டல்களாக இருந்து கொண்டு, அவனைப் பலப் பல எண்ணங்களின் மீது துலங் கச் செய்கின்றன. எனவே, இதற்கு மனம் என ஒன்று தனியாக இருக்க வேண்டிய தில்லை, ஆகவே. எவ்வாறு நோக்கினும், உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே-சிறப்பாக மூளையின் இயக்கமே மன உணர்வாகும் என்பது. வெளிப்படை.


மக்களாகிய உயர் திணை உயிரிகட்கே யன்றி, அஃறிணை உயிரிகட்கும் தூண்டல்-துலங்கல் செயல் பாடுகள் இருப்பதைப் பரக்கக் காணலாம். எனவே, அவையும் மன உணர்வு உடையன என்பது விளங்கும். அங்ஙன மாயின், அஃறிணை உயிரிகளும் மக்களைப் போல் ஏன் சிறப்புச் செயல்கள் புரியவில்லை எனில், அவற்றிற்கு மக்களைப்போல். கைகள் உள்ள உடல் அமைப்பு இல்லை-என்பதே அதற்குரிய காரணமாகும்.

உயிர் பற்றியும் உள்ளம் (மனம்) பற்றியும் யான் கூறியுள்ள கருத்துக்களை மேலும் வலியுறுத்த, என் பட்டறிவு (அனுபவ) நிகழ்ச்சிகள் இரண்டினை ஈண்டு தருகிறேன்.

ஒன்று :- இற்றைக்குப் (1988) பதினைந்து ஆண்டுகட்கு முன்பு, புதுச்சேரி வள்ளலார் சன்மார்க்க சங்கம் என்னும் நிறுவனத்தில் ஒரு நாள் யான் சொற்பொழிவாற்றிய போது, மனம் என ஒன்று தனியே இல்லை; மூளையின் இயக்கமே மனம் என்னும் என் கருத்தைக் கூறினேன். எனக்குப் பின் சொற்பொழி வாற்றியவர், என் கருத்தை மறுத்து, மனம் எனத் தனியே ஒன்று உண்டு என்று கூறினார். உடனே யான் எழுந்து மீண்டும் என் கருத்தை வலியுறுத்திப் பேசினேன். அதோடு அவர் நிறுத்திக் கொண்டார்.