பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


ஆட்சி வெறியால் அதைமதிக் காத
காட்சியை அவனிடம் கண்டு கலங்கினேன் ;
பனிப்புயல் வீசும் உருசிய நாட்டில்
படையுடன் சென்று மீளுங் காலை
இலையுதிர் மரம்போல் எல்லாம் இழந்து
பழியைச் சுமந்தவன் நிற்பது கண்டேன் ;
வளையாப் பெரும்புகழ் வாட்டர் லூவில்
வளையக் கண்டேன் ; கூட்டுப் புலிபோல்
கடலுக்கு நடுவில் சிறைப்படக் கண்டேன்.

பின்னால் கட்டிய கையும், சரிந்து
முன்னால் நிற்கும் முரசு வயிறும்
கண்களை விட்டு நீங்க மறுத்தன.
எத்தனை போர்கள் ! எத்தனை கொலைகள் !
எத்தனை பஞ்சணை இவன்கை வாளால்

முத்த மிழந்து முட்புதர் ஆயின !
எத்தனை குழந்தைகள் ஏந்துவா ரின்றிக்
கத்திக் கத்தித் தொண்டை வறண்டன !
இன்பம் ஒருவன் எய்துவ தற்குப்
பேரும் புகழும் பெருமித வாழ்வும்
சீரும் சிறப்பும் தேவையே இல்லை,
மக்களைக் கொன்று மலைபோல் குவித்துக்
கொக்கரித் தெழுந்து, குருதி யாற்றைக்
கத்தித் துடுப்பால் கடந்து வந்து
அரியணை ஏறிய நெப்போ லியனாய்
ஆவதைக் காட்டிலும், பிரெஞ்சு நாட்டில்

க. தி. 3