பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


வெள்ளைத்தாள் காதல் தூதை
விரும்பிநீர் அனுப்பி வைத்தால்
அல்லிப்பூ உதட்டு முத்தம்
ஆயிரம் அதற்க ளிப்பேன்.
உள்ளத்தில் பொறாமை யேதும்
உண்டானால், அதனை யந்த
வெள்ளைத்தாள் மீது காட்டும்:
வேறெவர் மீதும் வேண்டாம்.

என்னையென் குற்றத் தாலே
எடைபோட்ட மாமன், என்றன்
பெண்மையை மதிக்க வில்லை;
பெரும்புகழ் பெற்ற உம்மை
அன்னியன், மனிதன். என்று.
அளவுகோல் கொண்டு பார்த்தான்.
என்னுயிர்க் காத லர்நீர்
என்பதை எண்ணவில்லை.

மாதர்க்கு மங்க லச்சொல்
மனைவிதான்; எனினும் உங்கள்
பாதியாய் மாறு தற்குப்
பற்றுநான் கொள்ள வில்லை.
காதலி என்ற சொல்லில்
கணிகின்ற உரிமை யின்பம்
மோதிரத் திரும ணத்தின்
முன்னாலே, தகர்ந்து போகும்.