பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


மேற்புறச் சுவரில் நடராசப் பெருமானின் சிற்ப வடிவம் அமைந்துள்ளது. இவ்வடிவத்தின் இரு புறங்களிலும் ஒவியங்கள் காணப்படுகின்றன. ஒரு பக்கத்தில், சிவபெருமான் மான்தோல் இருக்கையின்மீது கண்ணை மூடிக்கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரில் சிவனடியார்களும், சிவகணங்களும் நின்றுகொண்டு பணிவோடிருக்கும் காட்சி தீட்டப்பட்டிருக்கிறது. அதை அடுத்து அழகான போர்வையும், நான்கு தந்தங்களும் உடைய வெள்ளை யானை ஒன்றும் தென்படுகிறது. அதன்மீது தாடியோடு கூடிய ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் தம் கையிலுள்ள தாளத்தை முழக்கி இன்னிசை பாடிக் கொண்டிருக்கிறார். அந்த ஓவியத்திற்கு அருகில் வெள்ளைக் குதிரையின்மீது ஏறிக்கொண்டு உடற்கட்டுடைய ஒருவர் விரைவாக வான வீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

மற்றெரு பக்கத்தில் வேதியர் பலர் கூடி அமர்ந்துள்ள அவை ஒன்று உள்ளது. அவ்வவையின் எதிரே ஓலையைக் கையில் தாங்கியபடி முதியவர் ஒருவர் தென்படுகிறார். அவருக்கு எதிரில் அடக்கமே உருவான இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். அவனுக்கு வலப்பக்கத்தில் கோவில் விமானமொன்றும், அதற்குள் நுழைவதற்கு விரைந்து செல்லும் வேதியர் கூட்டமொன்றும் தெரிகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள ஒவியங்கள் யாவும் சைவ சமய ஆசிரியர்களுள் ஒருவரான சுந்தர-