பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 போர், பருத்தியாடை தைப்போர், காலாடை தைப் போர், மேலாடை தைப்போர், தடித்த ஆடை தைப்போர், மெல்லிய துகிலாடை தைப்போர், மகளிர்க்கு ஆடை தைப்போர், உடலோடு பொருந் திய ஆடை தைப்போர் எனப் பல பிரிவினர் இருந் தனர். அரசகுடும்பத்தார் பெரும்பாலும் வெண்மை யான ஆடைகளையே உடுத்திக் கொண்டனர். இவ்வாடைகளைச் சலவை செய்வதற்கென்று பணி யாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். 'பலவிதமான பொன்னணிகளையும், வைர மிழைத்த நகைகளையும் அரச குடும்பத்தார் அணிந் திருந்தனர்; பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளுக்கேற்பப் பலவித நகைகளை அணிந்தனர். அரசிகளுக்கு நூற்றுக் கணக்கான பணிப் பெண்டிர் இருந்தனர். உள்ளத்தில் சலிப்பேற்பட்ட நேரங்களில் இசைக் குழுவினர் இன்னிசை எழுப்பி அரசியரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர். ஆடற்பெண்டிர் ஆடல் நிகழ்த்தினர்; கோ மாளிகளும் குள்ளர்களும் கேளிக்கை காட்டி வேடிக்கை புரிந்தனர். 'அரச குடும்பத்தினர்க்கு நகை செய்வதற் கென்று அரண்மனையின் அருகே ஒரு பட்டறையே இருந்தது. பொற்கொல்லர்களும், கல்லிழைக்கும் பணியாளரும், கருமாரும் உலைக் கூடத்தை விட்டு அகலாது பணி புரிந்தனர். விடிந்தது முதல் இரவு நெருங்கும் வரை உலேக்கூடத்தில் நெருப்படி யில் காயும் இப்பாட்டாளிகள் பெற்ற கூலி மிகமிகக் குறைந்ததுதான். - o

  • கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த கல்தச்சர் களின் நிலையோ மிகவும் இரங்கத்தக்கது. வெயிலி