பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

களையும், வாய்க்கால்களையும் நிறுவினார்; மணம் மிக்க கொடிப்பந்தர்களையும் அமைத்தார்; நாள் தோறும் மாலை வேளையில் அப்பந்தலில் அமர்ந்திருந்து கவிஞர்களோடும், கலைஞர்களோடும் விருந்துண்டார் ; கலையாராய்ச்சி செய்தார்; கவிதைகள் இயற்றினார். பாபர் எழுப்பிய இத் தோட்ட மாளிகை ‘சார்பாக்’ என்ற பெயரால் வழங்கப்பட்டது. அது இப்போது அழிந்து விட்டது. அதனுடைய சின்னங்கள் கூட இன்று காணப்படவில்லை.

பாபர் இறந்த பிறகு அவர் மகனான உமாயூன் அரியணை ஏறினார். சூர் பரம்பரையின் மன்னரான ஷெர்ஷா உமாயூனைத் துரத்திவிட்டு, ஆக்ராவில் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்தார். ஷெர்ஷா இறந்தபிறகு உமாயூனின் மகனாகிய அக்பர் ஆக்ராவைக் கைப்பற்றிக் கொண்டார். அக்பர் உறுதியான கோட்டையொன்றை ஆக்ராவில் எழுப்பினார். அக்கோட்டை இன்றும் காணப்படுகிறது. ஆக்ரா நகரில் மிகவும் பழமையான வரலாற்றுச் சின்னம் இதுதான். அக்பரின் மகனாகிய ஜஹாங்கீரின் ஆட்சியில் ஆக்ரா சிறப்பிடம் பெறவில்லை. ஜஹாங்கீரின் மகனான ஷாஜகான் அரியணை ஏறியதும், ஆக்ரா அவருடைய ஆட்சியில் அழியாப் பெரும்புகழைப் பெற்றது.

ஷாஜகானின் அன்பு மனைவியான மும்தாஜ் பேகம் இறந்ததும் அவளுடைய நினைவுச் சின்னமாகத் தாஜ்மகால் எழுப்பப்பட்டது. இது கி. பி. 1631 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுக் கி. பி.