பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


79 குதுப்மினரைச் சற்றுத் தொலைவிலிருந்து கூர்ந்து நோக்கில்ை, அது செங்குத்தாக இல்லா மல் சற்றுச் சாய்ந்திருப்பது தென்படும். பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்களே இச் சாய்வுக்குக் காரணம். டில்லியிலுள்ள தொல்பொருள் காப்புத் துறையினர் இதை மிகவும் கண்காணிப்போடு காத்து வருகின்றனர். சிறு விரிசல் ஏற்பட்டால் கூட உடனுக்குடன் அதைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குதுப்மினரின் அருகிற் சென்று பார்த்தோ மால்ை அல்டமிசின் சமாதியில் காணப்படுவது போன்ற அழகிய சிற்ப ஒவியங்கள் கீழ்மாடிகளின் சுவர்களில் காணப்படுகின்றன. கோபுரச் சுவர் களில் நாற்புறமும் கல்வெட்டுக்கள் காணப்படு கின்றன. அல்டமிசு குதுப்மினரைக் கட்டி முற்றுப் பெறச் செய்த செய்தியைப் பற்றிய எல் லாக் குறிப்புகளும் அவற்றில் காணப்படுகின்றன. கோபுரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற் காக, இதன் சுவர்களே வெளிப்புறத்தில் மிகவும் சரிந்திருக்குமாறு சாய்த்துக் கட்டியிருக்கின்றனர். கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒருவன் கீழே குதித் தால் அவன் நேராகப் பூமியில் விழமாட்டான் ; சுவரிலேயே மோதிக் கொள்வான். தாவிக் குதிப் பதில் மிகவும் வல்லவன யிருந்தால்கூடச் சுவரில் மோதாமல் கீழே குதிக்க முடியாது. குதுப்மினரின் உச்சியை நாம் அடைந்தோ மானுல் டில்லி நகரின் அழகிய காட்சிகளை யெல்லாம் ஒன்று விடாமல் பார்க்கக் கூடும். இவ் வுச்சியை யடைய 378 படிக்கட்டுகளை ஏறியாக