பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கடிதம் தந்து அனுப்பும் பாணபத்திரரையும் சேரர்க்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்பியவராய், முன்னர் அவரது இசைப்புலமையினை உணர்த்தவேண்டி “யாழ்பயில் பாணபத்திரன்” என்று குறிப்பிட்டருளினர். அவ்யாழ்ப் பயிற்சியினையும் நன் முறையில் பெற்றவர் என்பதை, “பண்பால் யாழ்பயில் பாணபத்திரர்” என்ற தொடரால் விளக்கியருளினர். யாழ்ப் பயிற்சி உடையராயினும், கல்விச் செருக்குக் காரணத்தால் கடவுளே மறந்த கயவர் அல்லர்: எம்மால் உன்பால் அனுப்பப்படுபவர் என்பதை நன்குணர்த்த “எம் பால் அன்பன்” என்று எடுத்து மொழிந்தனர். “எம்பால் அன்பன்” என்று எடுத்து மொழிந்ததனால் “நாம் அன்புடையோம் அல்லமோ” என்று சேரர் நினையாதிருக்கும் வண்ணம், மிக்க விழிப்புடன் “உன் போல்என்பால் அன்பன்” என்றும் எழுதி மன்னர்க்கு அத்தகைய எண்ணம் எழாதவாறு செய்தனர்.

என்னே இறைவர் பேரறிவுடைமை! தம்மால் அனுப்பப்படுபவர் வறுமையுற்ற காரணத்தால் உம்பால் அனுப்புகின்றோம் என்று கூறிப் பாணபத்திரருக்கு இழுக்கு உண்டாகுமாறு செய்ய எண்ணமற்றவராய், அவரது மாண்புமணக்க, “காண்பது கருதிப் போந்தனன்” என்றே திருமுகத்தில் தீட்டியருளினர்.இவ்வாறு எழுதிமுடித்து முடங்கலினைக் கொடுத்தனுப்பின், பொருள் கொடாமல் சேரர் அனுப்பிவிடுவரோ என்ற ஐயத்தினராய் “மாண்பொருள் கொடுத்து” என்றும் குறிப்பிட்டுப் பொருளினை அளிக்குமாறு தூண்டினர். ஒருவேளை சிறுபொருள் கொடுத்துச் சென்று வருக என்று சொல்லி விடுவாரோ என்று சிந்தித்த சிவனார், பெரும் பொருளைக் கொடுக்க என்று கட்டளையிடுவார் போல் “மாண் பொருள்