என்று செப்பியதாகும். சேக்கிழாரது தொடரான மனத்தினுந்தீண்டேன் என்பதும், கம்பர் வாக்கான சிங்தையாலும் தொடேன் என்பதும் எத்துணைப் பொருத்தமாக இருக்கின்றன பாருங்கள் !
இலக்குவன் தாயாகிய சுமத்திரையென்பாள் இலக்குவனுக்கு அறிவுரை கூறி இராமனிடம் கானகத்தில் எங்ஙணம் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகையில்,
ஆகாத தன்றால் உனக்கவ்வனம் இவ்வயோத்தி மாகாதல் இராமன்நம் மன்னவன் வையம்ஈந்தும் போகாஉயிர்த் தாயர்கம் பூங்குழல் சீதையென்றே ஏகாய்இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்என்றாள்,
என்று பாடியுள்ளார், இங்குக் கம்பர் "இவ்வயின் நிற்றலும் ஏதம்" என்றதன் குறிப்பு, இவ்வளவு நேரம், தாமதம்செய்தல் கூடாது; இராமன் காடு நோக்கிப் புறப்படுவதற்கு முன்சென்று வழிகாட்டியாகச் செல்லவேண்டும் என்னும் விரைவினைக் காட்டுவதாகும். இந்தவிரைவு குறிக்கும் கருத்தினைக் கம்பர் யாண்டுப் பெற்றார் எனில், சேக்கிழார் பெருமானர் நூலில் பெற்றார் என்றால், அது மிகையாகாது. இயற்பகை நாயனார் விரைந்து நின்ற செயலைச் சேக்கிழார் குறிப்பிடுகையில்,
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறிடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய வீக்கி
என்றனர். இங்கு "நின்றது பிழையாம்" என்னும் தொடரே கம்பரது நினைவிற்கு “இவ்வயின் நிற்றலும் ஏதம்" என வந்து அவர் நூலில் இடம்பெறலாயிற்று.
கண்ணப்ப நாயனர் புராணத்துள் திண்ணனர் வேட்டையாடும் சிறப்பைச்சிறப்பிக்குங்கால், யானையும் சிங்கமும் கண்ணப்பர் கடுங்கணைபட்டு ஒருங்கே சாய்வதை உவமை கூறுகையில் 'இரவொடு பகல்