உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுபுண்செய் கோவில் வேல் எறிந்தாற்போலும் புகல்வ தொன் றென்றார்

'

எனக் கூறினர்.

துன்பந் தருதற்கு இதைவிடச் சிறந்த உவமை காட்டல் அரிது. இந்த உவமையின் பொருட்பொலி வினைக் கம்பர் உணர்ந்து தமது நூலில், விசுவா மித்திரர் தசரதனிடம் இராமனை வேண்டியபோது, அவ்வேண்டுகோள், தசரதனுக்கு எவ்வாறு இருந்தது என்பதை விளக்க,

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தால்
எனச்செவியில் புகுத லோடும்.

என்று சிறது மாற்றி அமைத்துக்கொண்டனர்.

இங்ஙணம் பல்லாற்றானும் கம்பர், சேக்கிழார் பெருமானார் கவிகளில் ஈடுபட்டு அக்கவிகளின் கருத்துக்களையும், தொடர்களையும், சொற்களையும் தம் நூலில் ஆங்காங்கு ஏற்ற இடங்களில் அமைத்துப் பாடித் தம் நூலினைச் சிறக்கச் செய்துள்ளார் என்பதில் ஐயம் உண்டோ ?