64
இவர் அழைக்கப்பட்டார் என்பதையும் ஈண்டே உணர்ந்து கொள்வது உசிதமாகும்.
சாத்தனார் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பூண்டமைக்கு நம் தமிழகத்தில் இரு காரணங்கள் இயம்பப்பட்டு வருகின்றன. ஒன்று, சீத்தலை என்பது ஒர் ஊர். இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய தெய்வம் ஐயனார் என்பது. அத் தெய்வத்திற்குச் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. அப்பெயரையே இவருக்கு இட்டு வழங்கினர் ' என்பது. சீத்தலைச் சாத்தனார் என்ற பெயருக்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுவது யாதெனில், அதுதான் பின்வரும் குறிப்பாகும். அதாவது, "சீத்தலைச் சாத்தனார் சங்கிகால அறிவுடைச் சான்றோர் அல்லரோ? "அவர் தமிழ்ச் சங்கத்தில் இருக்கும்போது புலவர் என்று பெயரை வைத்துக் கொண்டு சிலர் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்து படித்துக் காட்டும்போது, அப்பாடல்களில் சொற் குற்றம், பொருட் குற்றம் முதலிய பல குற்றங்கள் மலிந்து இருந்தமையினக் கேட்கும் தோறும், சகிக்க முடியாத காரணத்தால், தாம் எழுதும் இருப்பு ஆணியாகிய எழுத்தாணியைக் கொண்டு ' இத்தகைய தவறுடைய பாடல்களையும் நாம் கேட்க நேர்ந்ததே என்று தம்தலையில் குத்திக் குத்தி வந்த காரணத்தால் குத்துண்ட இடம் புண்ணாகிச் சிழ் ஒழுகும் இடமாக இருந்தமைப்பற்றி, இவர் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டனர் ." என்பதாகும், ஆனால் இக்குத்து இப்புலவர்க்கு நின்றபாடு இல்லையோ என்று நீங்கள் எண்ணக் கூடும். இவர்க்கு இவ்வாறு தம் தலையில் குத்திப் புண்ணாக்கிக் கொண்ட செயல் முற்றுப் பெறும் காலமும் வந்து சேர்ந்தது. வள்ளுவப் பெருந்திகையார் வரைந்த வாய்மொழியாகிய திருக்குறட்பாக்களைக் கேட்டபின்னர், அக்குறட்பாக்களின் பொருள்