பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கட்டுரைக் கொத்து

என்னும் இப்பாடலேப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியவரும்.

இதனை நோக்கும்போது, தன் உறவுபற்றி இரக் கமே தோன்றும் என்பது புலனுகிறது. ஆகவே, தித்தன் தன் மகன் பகைகொண்டு வெளியேறினலும், இவன் மல்லைேடு போர்புரியத் தொடங்கியபோது தன் படையினே அனுப்பி இருப்பன் என்று யூகிக்க வேண்டி உளது. அப்படையின் வன்மையோ ஆர்ப் பெழு கடலினும் பெரிது, அவன் களிறே கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனவே என்றனர் சாத்தந்தையார்.

போரவைக் கோப்பெரு நற்கிள்ளி படைப்பலத் துடன் போர்க்குச் சென்ருளுயினும், தனக்குத் தானே உதவி என்பதுபோலத் தானே தனித்துப் போர் செய்து வெற்றி காணக்கூடியவன். இவன் கையகப்பட்டவர் எவராயினும் தப்புதல் அரிது. இவன் செய்யும் போர் விரைந்து செய்யும் போர். இது சாத்தங்தையார், தைத்தற்குச் செலுத்தும் ஊசியைவிட வேகமுடையது என்ற உவமை காட்டி உரைப்பதால் அறியவருகிறது. இதனைப் புலவர் வாக்காகிய 'ஊசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொளவந்த பொருங்னெடு ஆர்புனே தெரியல் பெருந்தகை போரே என்ற அடிகளால் அறிந்துகொள்ளலாம். ஈண்டு ஊர் கொள வந்த பொருநன் ஆமூர் மல்லனய் இருக்கவேண்டும். ஆர் புனே தெரியல் நெடுந்தகை போரவைக் கோப்பெரு நற்கிள்ளிதான் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? இவன் குல மாலையாம் ஆத்தியைப் புனைந்திருந்தமை யின், ஆர் புனே தெரியல் நெடுந்தகை' எனப்பட்டான்.