பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 14 I

ஈண்டுப் பரமதத்தன் செயல், புறக்கணித்தற் குரியதே. இவ்வணக்கத்தைப் புனிதவதியார் ஏற்றிலர் என்பதைச் சேக்கிழார் பெருமாளுர்,

'கணவர்தாம் வணங்கக் கண்ட

காமர்பூங் கொடிய ருைம்

அணைவுறுஞ் சுற்றத் கார்பால்

அச்சமோ டொதுங்கி கிற்க'

என்று பாடி அறிவிக்கின்ருர். ஈண்டுக் காமர்பூங் கொடியனர் என்று புனிதவதியாரைப் புகன்றதல்ை, காற்று மோதக் கலங்கும் கொடிபோலக் கணவர் வணங்கக் காரிகையார் கலங்கினர் என்பது உன்னற். குரிய உட்பொருளாகும்,

பரமதத்தனது செயலேக் கண்ட உறவினர் வெள் கினர் ஒருபால்; வியப்புற்றனர் மற்ருெருபால். 'மனமலி தாரிய்ை ! நீ மருள் ஏறப் பெற்றனேயோ ? உன் திரு மனேவிதன்னே வணங்குவ தென்கொல் ? என்று உசா வினர். உறவின்முறை உத்தமர்களே ! யான் மருள் உற்றேன் அல்லேன். தெருளே உற்றுளேன். இம் மாதரசியார் மானிடர் அல்லர். நற்பெருங் தெய்வம். நான் அறிந்தேன். பெற்ற இம்மகவுக்கு யான் இவ் வம்மையார் பேரும் இட்டேன். ஆதலாலே, பொற் பதம் பணிந்தேன். நீங்களும் போற்றுதல் கடமை யாகும் என்று கழறினன். இவ்வாறு பரமதத்தன் கூறக்கேட்ட உறவினர்கள் உணர்த்துவதும் உணரு வதும் இன்ன என இயலாதவராய் வாளா இருந்தனர்.

இவற்றை எல்லாம் ஆழ அழுந்த நோக்குங்கால் பரமதத்தனும் புனிதவதியாரும் கொண்ட மணம் எத்