பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கட்டுரைக் கொத்து

மகவும் பெறும் காரணம்! யான் அத்துணை தீங்கு யாது செய்தேன் என்று எண்ணி உள்ளம் துடிக்கப் பார்த்தனர். ஆதலின், அப்பார்வையோடிருந்த அவ் வம்மையாரை "மாணிளம் பிணைபோல் கிறை மனைவி யார்' என்று பாவாணர் இசைத்தார்.

இவ்வாறு மருட்சிகொண்ட மாதர்களுக்கு மானின் கண்களே உவமை கூறுவது மாபெரும் புவவர்க்கு வாய்ந்ததொரு பண்பாகும். திருஞானசம்பங்தர் இளைய கோலத்துடன், முதுமை நிறைந்த பலரோடு பண்டி யன் அவைக்களத்து வீற்றிருக்கையில், அம்முதியவர்க ளால் பாலருவாயர்க்கு ஏதேனும் இடுக்கண் நிகழுமோ என்றெண்ணினர் மங்கையர்க்கரசியார். இவ்வம்மை யாரது அகத்து எண்ணத்தை முகத்தால் அறிந்த தோணிபுரத் தோன்றலார் அவ்வம்மையாரை நோக்கி,

"மானி னேர்விழி மாதராய்

வழுதிக்கு மாபெருங் தேவிகேள் பானல் வாய்ஒரு பாலன் ஈங்

கிவன் என்று பேரி வெய்திடேல்'

என்று பாடினர். இதுகிற்க.

மருட்சியுற்ற பார்வையோடிருந்த மங்கையர் தில கத்தின் மலரடி முன்னே பரமதத்தன் தன் பின்னேய மனேவியுடனும் மகவுடனும் வீழ்ந்து, 'அம்மையிர் யான் உமதருளால் வாழ்வேன். இவ்விளங் குழவிதானும பான்மையால் உமது நாமம் தாங்கிய வாழ்வுடைய தாகும் என்று பணிமொழி பகர்ந்து எழுந்தான். கணவர் வணங்குவதைக் கற்பு டை மனேவியார் ஏற்பரோ? மனேவி கணவனைத் தொழுதெழுவாள் என்பதே தமிழரது மரபு.