பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 139

செய்தனர். மடகடை மயில் அன்னுரை மாமணிச் சிவிகை ஏற்றி, பாண்டியநாட்டை நோக்கிப் புறப்பட லாயினர். அம்மையார் இளமை மாரு இன்னழகுடை யர் என்பதைச் சேக்கிழார், தாமரைத் தவிசில் வைகும் தனித்திரு' என்னும் தொடரால் குறிப்பது, இத்தகை யாருடன் இன்பம் துய்க்கவேண்டிய இங்கிலேயில் பரம தத்தன் ஒருவிச்சென்றது அடாதது என்பதை அறி விக்கவே ஆகும். சுற்றமும் நட்பும் சூழ யாவரும் கன்னி நாட்டை அண்மினர். தம் வருகையைப் பரம தத்தனுக்கு ஆள் போக்கி அறிவித்தனர்.

புனிதவதியாரின் வருகை கேட்ட வணிகளும் பரமதத்தன் இடியேறுண்ட நாகம்போல இடரில் வைகினன், இதற்கு என் செய்வ 'தென்று ஏங்கினன். மணங்த மனேவி இருக்க மறுமணம் கொண்டது மாசு ஆயிற்றே என்று மயங்கினன். பிறகு ஒருவாறு தேறி, 'நேரே சென்று புனிதவதியார் பொன்னடி பணிந்து போற்றுதல் செய்வோம்’ என்று முடிவு கொண்டான். கோயில் வழிபாட்டைப் போற்றும் கொள்கையுடையன் போலக் குளித்து முடித்துத் தாய ஆடையும் துலங்க அணிந்துகொண்டான். மனேவியையும் மகவையும் அவ் வாறே செய்துகொள்ளவும் கட்டளை இட்டனன். பின்பு மூவரும் நடங்து புனிதவதியாரைக் காணப் போங்தனர்.

சேய்மையில் தம் கணவனரும், கணவரோடு காரிகை ஒருத்தியும், காரிகையோடு நல்ல கவின்தரு மகவும் வருவதைப் புனித வ தி யார் கண்ணுற்ருர். அம்மையார் பார்த்த பார்வை நேரிய பார்வையன்று. மருண்ட பார்வை, அச்சப் பார்வை; அவலப் பார்வை. 'என்னே ! என்னே நீத்து வேருெரு மங்கையை மணந்து,