பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்ருேர்

சான்ருேர் என்னும் சொல் வெறும் பெரியவர்கன் என்று பொருள் தரும் மொழிமட்டும் அன்று. இக் கிளவிக்குரிய உண்மைப்பொருளேக் காணவிழைவார், சங்ககாலப் புலவர்களுள் ஒருவரான பிசிராங்தையார் வாக்கைத்தான் துணைகொள்ள வேண்டும். அவர் சான்ருேர் இன்னர்தாம் என்று விளக்கவந்த இடத்து, "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர்’ என்று விளக்கம் தந்து போக்தார். இத்தொடரின் பொருள் எல்லாப் பண்புகளும் கிறைந்து ஐம்புலன் களே அடக்கிய கோட்பாட்டினேயுடைய சால்புடைய வர்கள் என்பது.

இத்தகைய பண்பு வாய்ந்த இருபெரும் சான்ருேர் களின் ஒத்த கருத்துக்களே எடுத்து விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். இவ்விரு சான்ருேர்கள் யாவர்? அவர்கள்தாம் திருவள்ளுவரும் திருமூலரும் ஆவர்.

இவ்விரு புலவர் பெருமக்கள் பெயர்க்குமுன் திரு என்னும் அடைமொழி அமைந்திருப்பதுகொண்டே இவர்களது மாண்பினை நன்குனர்ந்து கொள்ளலாம்.

பான்மை பெற்ற சொல்லே ஆயினும், பேராசிரியர் கொண்ட பொருளாம் கண்டோரால் விரும்பப்படும்