பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கட்டுரைக் கொத்து

தொடக்கத்தில் கபிலர் தம் கடப்பாட்டை கிறை வேற்றும் கருத்துடையவர் என்பதைக் குறிப்பிட் டிருந்தோம். இதற்குக் காரணம் இவர்பால் இருந்த இரக்கமே அன்றி வேறன்று. இந்த உண்மை பாரி இறந்ததும், அவன் மகளிரைத் தம் மக்களாகவே கருதி அவர்கட்குத் தக்க வரனேகாடி அவர்கட்கு மணமுடித்து வைக்க எடுத்துக்கொண்ட முயற்சியில்ை நன்கு தெரிய வருகிறது. மேலும், இவருக்குப் பெண்கள் சமூகத்தில் இரக்கம் மிகுதியும் உண்டு என்பதும் தெரிகிறது. இதற் குரிய சான்றையும் ஈண்டே காண்போமாக.

பேகன் என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன். இவனது வள்ளன்மை கற்பனைக்குக்கூட எட்டாதது என்று எண்ணியும் விடலாம். ஆனால், இவனது கொடையைப்பற்றிப் புலவர்கள் கூறியவை கற்பனேயும் அல்ல; புனைந்துரையும் அல்ல. அனைத்தும் மெய்யுரைகளே. இவன் குளிரால் வாடி இருந்த மயில் ஒன்றன் வாட்டத்தினக் கண்டு ஆற்ருளுய் அதற்குத் தனது விலையுயர்ந்த போர்வையினை ஈந்து போர்த்திச் சென்ருன், இது சீரிய கொடை அன்ருே ? ஆல்ை, இத்தகைய பண்பாடு அமைந்த பண்பாளனிடம் ஒரு தீக்குணம் மட்டும் இருந்துவந்தது. அதாவது, தனக்கு வாழ்க்கைப்பட்ட கண்ணகி (இவள் கோவலன் மனேவி யின் பெயரினைப்பெற்ற நங்கையாகிய பேகன் மனேவி ஆவாள்) என்பாளேத் தணந்து பரத்தை ஒருத்தியின் வயத்தளுய் வாழ்ந்து வந்ததே ஆகும். ஆனால், இவனது இச்செயல் நீடித்திருக்கவில்லை. புலவர்கள் பலர் முனைந்து நின்று பேகனுக்கு அறிவுறுத்தி அவனைப் பரத்தையி னின்று பிரித்துக் கண்ணகி என்பாளுடன் வாழச் செய்