பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 35

தனர். அங்ங்னம் முயன்றவருள் கபிலரும் ஒருவர் ஆவார்.

ஒருமுறை கபிலர் பேகனைக் காண அவனது திரு மாளிகைக்குச் சென்றனர். ஆனால், பேகன் அம்மனே யகத்து இலன். இதனைப் புலவர் அறியார் என்ருலும், அவனது இருப்பிடமான மலேயினே வாழ்த்தி கின்ற போது பேகனது மனையாள் கண்ணகி, தன் அன்புக் குரிய மளுளன் பெயரைச் சுட்டிப் பாடியவர் யாரோ என்பதை அறிய வெளியே வங்தனள். வந்தவள் முகத் தில் வசிகரம் இன்றி வருத்தக் காட்சியே தோற்றம் அளித்தது. இதனேக் கண்டார் கபிலர். காரணத்தினை ஒருவாறு ஊகித்து அறிந்துகொண்டார். நேரே பேகன் வாழிடம் நோக்கிப் புறப்பட்டார். பேகனையும் கண் டார். உடனே பேகனை நோக்கி, "பேக ! நின்னே நாடி கின் மனேயகம் சென்றேன். சென்ற யான் கின் புகழை வாழ்த்தி கின்றேன். அதுபோது ஒர் அழகிய அணங்கு வெளியே போங்தனள். போங்தவள் தன் கண்களில் நீர்வார நின்றனள். அவளேக் கண்டபோது, அவள் இரக்கப்படத் தக்கவள் என்பது தெரிகிறது. அவள் யாரோ யான் அறியேன். என்ருலும், உன் பேரைக் கேட்டதும் உருகும் உள்ளத்தவளாய் இருத்தலின், அவள் உனக்கு உறவினள் என்றே யான் ஊகிக்கின் றேன். எனவே, அவட்கு அருள்செய்ய வேண்டுவது உன் க.னே' என்றனர். இவ்வாறு கூறக்கேட்ட பேகன் அவர் கூறியபடி கடந்திருப்பன் என்பதைக் கூற வேண்டா அன்ருே ? இங்ங்னமெல்லாம் இப்புலவர் பெருமான் பிறர்பொருட்டு அரும்பாடு பட்டுள்ளார், இவரது இரக்கச்செயலுக்கு மற்ருேர் எடுத்துக்காட்டை